கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை; 2 பேர் கைது
கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சங்கர் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன் மற்றும் போலீசார் சாஸ்திரி நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் கோவில்பட்டி சாஸ்திரி நகரை சேர்ந்த மூக்கையா மகன் மாரிசெல்வம் (21) மற்றும் கோவில்பட்டி மார்க்கெட் ரோடு பகுதியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் சங்கர் குரு (35) என்பதும், அவர்கள் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
உடனே போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 1 கிலோ 500 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.