சொத்துக்குவிப்பு வழக்கில் அரியானா முன்னாள் முதல்- மந்திரி சவுதாலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை
கடந்த 1993 முதல் 2006 ம் ஆண்டு வரை, முறைகேடாக ரூ.6.09 கோடி சொத்து சேர்த்ததாக அரியானா முன்னாள் முதல்- மந்திரி ஓம் பிரகாஷ் சவுதாலா மீது சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில், சவுதாலாவுக்கு எதிராக கடந்த 2010-ம் ஆண்டுமார்ச் 26ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லியின் ரோஸ் அவென்யூ நீதிமன்றம், ஓம் பிரகாஷ் சவுதாலா குற்றவாளி என கடந்த வாரம் தீர்ப்பு அளித்தது.
அவருக்கு விதிக்கப்படும் தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்து இருந்தது. தண்டனைஅளிப்பது குறித்த வாதம் முடிந்த நிலையில், இன்று தீர்ப்பளித்தது.
அதில், ஓம் பிரகாஷ் சவுதலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ. 50லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.