தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி பிளஸ்-2 பொதுத் தேர்வு தொடங்கியது. 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகள், 18,344 தனித் தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் பிளஸ்-2 தேர்வை எழுதினார்கள். இந்த தேர்வுகளள் அனைத்தும் மார்ச் 25-ந் தேதி நிறைவடைந்தது. உடனடியாக, விடைத்தாள் திருத்தும் பணிகளும் மாவட்ட தலைநகரங்களில் தொடங்கி நடைபெற்றது. இந்தப் பணிகள் […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், குலசேகரபுரம், லிங்கம்பட்டி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார். குலசேகரபுரம் கிராம ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்ல திட்ட பணிகள்,வீடுகளில் இருந்து பெறப்படும் குப்பைகள் மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் என தனித் தனியாக தரம் பிரித்து வழங்கப்படும் பணிகள், உரக்கிடங்கு அமைக்கும் பணியையும் கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா பார்வையிட்டார். மேலும் லிங்கம்பட்டியில், […]
மத்திய உள்துறை அமைச்சகம் பல மாநிலங்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில், “பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்டுவரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, எந்த தாக்குதலையும் எதிர்கொள்ள தயாராகும் வகையில் சில மாநிலங்களில் நாளை (புதன்கிழமை) போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மாநிலங்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய நடைமுறைகள் வருமாறு:-*எதிரி நாட்டு விமானங்கள் மற்றும் ஏவுகணை தாக்குல் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை செய்யும் ஏர் சைரன்கள் செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். […]
பஹல்ஹாமில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கோவில்பட்டியில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்ஹாமில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த சுற்றுலா பயணிகளுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம் சார்பாக கோவில்பட்டி சவுபாக்யா மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்விற்கு மதிமுக மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயகா ரமேஷ் தலைமை தாங்கினார். இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் மாநில செயலாளர் க தமிழரசன் முன்னிலை வகித்தார், நிகழ்ச்சியில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் […]
கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்துக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று (5.5.2025) தொடங்கி 14.05.2025 வரை நடக்கிறது. நாடார் உறவின்முறை சங்கத்தலைவர். பழனிச்செல்வம். கோவில் தர்மகர்த்தா மாரியப்பன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், மண்டகப்படியாளர்கள், பொதுமக்கள், பெரியோர்கள், மஞ்சள் நீராட்டு இளைஞர்கள் புடைசூழ மங்களப்பொருட்களுடன் மேளதாளம் முழங்க கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து காலை 6.மணிக்கு மேல் 7.25 மணிக்குள் மேஷ லக்கனத்தில் கொடியேற்றுவிழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர். கொடியேற்றம் முடிந்ததும் […]
கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் பதிவு செய்வதற்கான இரண்டு நாள் சிறப்பு முகாம் இன்று காலை தொடங்கியது. முகாம் இன்றும்,நாளை(6-ம் தேதி)யும் நடக்கிறது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கி மருத்துவ காப்பீடு திட்டத்தில் பதிவு செய்வதற்கான முகாமை தொடங்கி வைத்தார். மேலும், பதிவு செய்தவர்களுக்கு உடனடியாக காப்பீடு திட்ட அடையாள அட்டையை வழங்கினார். ,கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, நகராட்சி பொறியாளர் சணல்குமார், நகர்மன்ற […]
1980-களில் தொடங்கி இன்று வரை அனைவரின் மனதிலும் நீங்கா இடத்தை பிடித்துள்ள நகைச்சுவை நடிகர் கவுண்டமணி. இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ’16 வயதினிலே’ படத்தின் மூலம் முக்கிய கதாபாத்திர நடிகராக அறிமுகமானார். இதன்பின் கவுண்டமணி தொடர்ந்து பல வருடங்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். நடிகர் கவுண்டமணி, சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், விஜய், அஜித் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். கிட்டதட்ட 50 ஆண்டுகளாக சினிமாவில் […]
இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி உள்ள பாகிஸ்தான் மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை கண்டுபிடித்து வெளியேற்ற வேண்டும். தீவிரவாத செயல்களுக்கு ஆதரவாக செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி கோவில்பட்டியில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பயணியர் விடுதி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சரவண கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.. நகரத் தலைவர் காளிதாசன், ஒன்றிய தலைவர்கள் புருஷோதராஜா, ராமர் பாண்டியன், முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை […]
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வுகளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களாக 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகளும், தனித் தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுதினர். இந்த சூழலில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 9ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் பொறியியல் படிப்புகளில் சேர நாளை மறுநாள் (மே 7ம் தேதி) முதல் […]
தி.மு.க. பொதுக்கூட்டத்தில் திடீரென சாய்ந்த மின்விளக்கு கம்பம்; ஆ.ராசா எம்.பி. நூலிழையில் தப்பினார்
மயிலாடுதுறை நகர தி.மு.க. சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் சின்ன கடை வீதியில் நேற்று இரவு நடந்தது. இதில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா எம்.பி. பேசிக்கொண்டு இருந்தார். அப்போது பலத்த காற்று வீசியதால் மேடையின் அருகே பொருத்தப்பட்டிருந்த அதிக வெளிச்சம் தருவதற்காக அமைக்கப்பட்டு இருந்த மின்விளக்கு கம்பம் திடீரென்று சாய்ந்து ஆ.ராசா எம்.பி. பேசிக்கொண்டு இருந்த மைக் வைக்கப்பட்டு இருந்த ‘போடியம்’ மீது விழுந்தது. உடனே சுதாரித்துக்கொண்ட ஆ.ராசா எம்.பி. தான் பேசிக்கொண்டு இருந்த மேடை […]