கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், குலசேகரபுரம், லிங்கம்பட்டி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.
குலசேகரபுரம் கிராம ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்ல திட்ட பணிகள்,வீடுகளில் இருந்து பெறப்படும் குப்பைகள் மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் என தனித் தனியாக தரம் பிரித்து வழங்கப்படும் பணிகள், உரக்கிடங்கு அமைக்கும் பணியையும் கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா பார்வையிட்டார்.

மேலும் லிங்கம்பட்டியில், அங்கன்வாடிமையம் உள்ளிட்ட திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள் மீனாட்சிபுரத்தில் மரக்கன்று உற்பத்தி மையத்தினையும் கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா ஆய்வு செய்து நிலுவையிலுள்ள பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அவருடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார், ராமராஜன், உதவி செயற்பொறியாளர் ராஜரத்தினம், ஒன்றிய பொறியாளர் சங்கரசுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் சென்று இருந்தனர்.


