கோவில்பட்டி ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம் சார்பாக ஆண்டுதோறும் கோடைகால மற்றும் குளிர்கால ஆக்கி பயிற்சி முகாம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு கோடை கால பயிற்சி முகாம் 11 -ந்தேதி தொடங்கியது. கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி ஆக்கி மைதானத்தில் 20 5 2025 வரை நடக்கும் இந்த பயிற்சி முகாமில் மொத்தம் 50 பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொள்கிறார்கள். தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரை […]
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்துக்கு மனைவியுடன் வந்த ஜி.பி.முத்து; காணாமல் போன தெருவை கண்டுபிடித்து
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த ஜி.பி. முத்து, டிக்டாக் மூலம் பிரபலம் ஆனவர். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் புகழ் பெற்றார். இதை தொடர்ந்து சினிமாவில் நடிக்க தொடங்கி விட்டார். திங்கட்கிழமையான இன்று தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பங்கேற்று ஆட்சியரிடம் மனு அளிக்க ஜி.பி.முத்து தனது மனைவியுடன் வந்தார். மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஜி.பி.முத்து அளித்த மனுவில் கூறி இருந்ததாவது:- “தூத்துக்குடி மாவட்டம்,திருச்செந்தூர் வட்டம்,காலன் […]
புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- புதிய தமிழகம் கட்சியின் 7-வது மாநில மாநாடு டிசம்பர் மாத இறுதியில் மதுரையில் நடைபெறும். கடந்த 10 நாட்களில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 200 கிராமங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். உள்ளாட்சி அமைப்புகள் முறையாக செயல்படாத காரணத்தால் குடிநீர், தெருவிளக்கு, சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதில், தேவேந்திரகுல மக்கள் வாழும் பகுதிகள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு […]
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் உலக செவிலியர் தின விழா நடைபெற்றது. திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கலந்து கொண்டு, மருத்துவ துறையில் 25 மற்றும் 30 ஆண்டுகளுக்கு மேலாக சேவை புரிந்த செவிலியர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். மேலும், தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் உள்புற நோயாளிகளை உடனிருந்து பராமரித்துக் கொள்ளும் நபர்கள் தங்குவதற்காக ரூ 49 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தைக் கனிமொழி […]
கோவில்பட்டி ஸ்ரீ ராக வேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு கோவில் முன்பு அன்னதானம் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.. அதன்படி 45 வது மாதம் அன்னதானம் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் சமேத பூவனநாத சுவாமி கோவில் முன்பு நடைபெற்றது.. அறக்கட்டளை செயலாளர் ஜோதி காமாட்சி வரவேற்றார். தூத்துக்குடி டி.எஸ்.பி.சால்ட் அதிபர் பெரிய சுவாமிநாதன் தலைமை தாங்கினார். தொழிலதிபர் சக்தி முருகன், மதுரை காய்கனி கடை அதிபர் சண்முகராஜ்.. ஓம் சக்தி […]
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 50) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி செல்வி (45). இவர்களுடைய மகள்கள் ரஞ்சனி (19), சந்தியா (17). ரஞ்சனி பி.எஸ்சி. நர்சிங் படித்து வருகிறார். சந்தியா சமீபத்தில் வெளியான பிளஸ்-2 தேர்வில் 600-க்கு 520 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று இருந்தார். இந்த நிலையில் ரவி அப்பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதனால் செல்வி, மகள் ரஞ்சனி ஆகியோர் வீட்டு வேலைகளை கவனித்து வந்தனர். இளைய […]
மதுரையில் சித்திரை திருவிழா: பச்சைப்பட்டு உடுத்தி வைகையில் எழுந்தருளிய கள்ளழகர் ;பல லட்சம்
மதுரையில் சித்திரைத்திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் 8-ந் தேதி கோலாகலமாக நடந்தது. 9-ந் தேதி தேரோட்டம், 10-ந் தேதி தீர்த்தவாரியுடன் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெற்றது இதேபோன்று அழகர்மலையில் இருந்து சுந்தரராஜப்பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு தங்கப்பல்லக்கில் நேற்று முன்தினம் மாலை 6.10 மணியளவில் மதுரைக்கு புறப்பட்டார். கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் கைத்தடி, நேரிக்கம்பு […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகத்தில் மிஸ் திருநங்கை அழகிப்போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் விஷால் மேடையில் திடீரென மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் முதலுதவி சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறி விஷால் தெளிவடைந்தார். பின்னர் \நடிகர் விஷால் காரில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதே விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடி உடனிருந்து, நடிகர் விஷாலை மருத்துவமனைக்கு காரில் அழைத்து சென்றார். நடிகர் விஷாலின் உடல்நிலை பற்றி இன்று வெளியான தகவல்கள் வருமாறு:- திருநங்கைகள் சமூகத்தால் ஏற்பாடு […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 29-ந் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரம் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து கூவாகம் கிராமத்திற்கு வந்துள்ளனர். இவர்களை மகிழ்விக்கும் வகையிலும், உற்சாகப்படுத்தும் விதமாகவும் திருநங்கைகளுக்கான பல்வேறு நடனப்போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், அழகிப்போட்டிகள் நடந்து வருகிறது. அந்தவகையில் நேற்று மாலை தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் கூவாகம் திருவிழா நிகழ்ச்சி விழுப்புரம் புதிய […]
பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் பின்விளைவுகள் பயங்கரமாக இருக்கும்; பிரதமர் மோடி எச்சரிக்கை
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் தாக்குதல் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்த நிலையில், எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளை குறிவைத்து கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது. இந்த தாக்குதல் முயற்சிகளை இந்திய ராணுவம் தொடர்ந்து முறியடித்து வந்தது. இந்த நிலையில், […]