திருநங்கைகள் அழகிப்போட்டியில் மயங்கி விழுந்த நடிகர் விஷால் உடல்நிலை பற்றிய விளக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகத்தில் மிஸ் திருநங்கை அழகிப்போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் விஷால் மேடையில் திடீரென மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் முதலுதவி சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறி விஷால் தெளிவடைந்தார்.
பின்னர் \நடிகர் விஷால் காரில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதே விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடி உடனிருந்து, நடிகர் விஷாலை மருத்துவமனைக்கு காரில் அழைத்து சென்றார்.

நடிகர் விஷாலின் உடல்நிலை பற்றி இன்று வெளியான தகவல்கள் வருமாறு:-
திருநங்கைகள் சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டபோது, விஷால் சிறிது நேரம் சோர்வடைந்து மயக்கம் அடைந்தார்.
அவர் அன்று மதியம் தனது வழக்கமான உணவைத் தவிர்த்து, ஜூஸ் மட்டுமே குடித்ததால், ஆற்றல் குறைந்து போனது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு மருத்துவர்கள் முழுமையான பரிசோதனை நடத்தினர்.

அதிர்ஷ்டவசமாக, கவலைக்கு எந்த காரணமும் இல்லை. விஷால் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக மருத்துவக் குழு உறுதிப்படுத்தியுள்ளது, மேலும் தொடர்ந்து வழக்கமான உணவு நேரத்தைப் பராமரிக்குமாறு அவருக்கு அறிவுறுத்தியுள்ளது. அவர் தற்போது நலமாக உள்ளார், ஓய்வெடுத்து வருகிறார்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

