• May 21, 2025

Month: April 2025

செய்திகள்

சொத்து குவிப்பு வழக்கில்  அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த திண்டுக்கல் கோர்ட்டு உத்தரவு ரத்து

அமைச்சர் ஐ.பெரியசாமி  கடந்த 2006 முதல் 2010 ஆம் ஆண்டு வரை வருவாய், சட்டம், சிறை மற்றும் வீட்டுவசதி துறை  அமைச்சராக இருந்த போது 2 கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவரது மனைவி சுசீஸா, மகன்கள் செந்தில்குமார், பிரபு ஆகியோர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட […]

கோவில்பட்டி

கோவில்பட்டி மூப்பன்பட்டி பகுதியில் 23 கிலோ கஞ்சாவுடன் 4 பேர் சிக்கினர்

கோவில்பட்டியில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து உயர் ரக  கஞ்சா விற்பனை செய்த 3 பேரை, சில நாட்களுக்கு முன்பு  போலீசார் கைது செய்து 11 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில்,  கோவில்பட்டி மூப்பன்பட்டி பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து பேக்கிங் செய்து காரில் வைத்து  வாடிக்கையாளர்களை குறிப்பிட்ட இடத்துக்கு வரவழைத்து விநியோகம் செய்து வந்தது தெரிய வந்தது. டி.எஸ்.பி. ஜெகநாதன்,  இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர் முகம்மது,  சப் இன்ஸ்பெக்டர் […]

கோவில்பட்டி

சிமெண்டு பாரம் ஏற்றி சென்ற லாரி, சாலை தடுப்பில் மோதி விபத்து

விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர். நகரில் உள்ள தனியார் சிமெண்டு ஆலையில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்திற்கு சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்றது. லாரியை மார்த்தாண்டத்தை சேர்ந்த விவின் என்பவர் ஓட்டி சென்றார்.  அந்த லாரி கோவில்பட்டி இனாம் மணியாச்சி பகுதியில் நான்கு வலிசாலையில்  சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே  இரும்பு தடுப்பு வேலியில் மோதியது. சுமார் 200 மீட்டர் தூரம் வரை தடுப்புகளை உடைத்து கொண்டு போய் லாரி […]

செய்திகள்

திட்டங்குளம் அருகே சத்திய முழக்கம் சபை ஆலய அடிக்கல் நாட்டு விழா

கோவில்பட்டி திட்டங்குளம் அருகே சத்திய முழக்கம் சபை ஆலய அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சத்திய முழக்கம் சபை ஆலய அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்தார். கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி,திமுக ஒன்றிய செயலாளர்கள் முருகேசன்,ராதாகிருஷ்ணன்,பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ்,சத்திய முழக்கம் சபை பாஸ்டர் ஸ்டீபன்,மதுரை ஹைகோர்ட் வழக்கறிஞர் சாமிதுரை,பாஸ்டர்கள் கார்த்தி கமாலியேல், பிரவீன்ராஜ்குமார்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தங்கமாரியம்மாள் மற்றும் இறைமக்கள் பலர் […]

கோவில்பட்டி

கரிசல்குளம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியைக்கு பணி நிறைவு பாராட்டு

கோவில்பட்டி அருகில் கரிசல்குளம் அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சுப்புத்தாய்க்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. கிராம மக்கள் சார்பில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு கரிசல்குளம் கிராம பஞ்சாயத்து தலைவி சரோஜா பால்ராஜ் தலைமை தாங்கினார். வார்டு உறுப்பினர் சுப்புலட்சுமி முன்னிலை வகித்தார். ஆசிரியை நிர்மலா அனைவரையும் வரவேற்றார். கோவில்பட்டி அரசு ஓய்வூதியர் சங்க பொருளாளர் விஜயன் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பால்ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவி ஆஷா உறுப்பினர்கள் […]

செய்திகள்

தமிழகத்தில் சிகரெட் லைட்டர் விற்பனையை தடை செய்ய நடவடிக்கை; அமைச்சர் தங்கம் தென்னரசு

சட்டமன்றத்தில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துபேசினார்.அவர் பேசியதாவது:- “தென்மாவட்டங்களில் விவசாயத்துக்கு அடுத்த நிலையில், தீப்பெட்டி தொழில் உள்ளது. ஏழை பெண் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் தொழிலாகவும் இருக்கிறது. அந்த தொழிலுக்கு லைட்டர் விற்பனை பெரும் சவாலாக உள்ளது. தீப்பெட்டி தொழிலாளர் சங்கம் சார்பில் மனு அளித்ததின் பேரில், முதல்வர் ஸ்டாலினும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். ஆனால் உதிரி பாகங்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டது. […]

செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு 9 முக்கிய அறிவிப்புகள் ; மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

தமிழக சட்டசபை இன்றைய கூட்டத்தில் , அரசு ஊழியர்களுக்கு 9 முக்கிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:- 1.அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்படும் 2. அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்புக்கான பனபலன் இந்த ஆண்டே வழங்கப்படும். 01-10-2025 முதல் அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பை சரண் செய்து பனப்பலன் பெறலாம்.3.அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்படும்.4. 3 வகையான ஓய்வூதியங்கள் குறித்து […]

செய்திகள்

தமிழ்நாடு அமைச்சரவையில் திடீர் மாற்றம்; பொன்முடி,செந்தில் பாலாஜி நீக்கம்

தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன.  இந்த சூழலில் வனத்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி அண்மையில் பேசிய பேச்சுக்கள் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தன. பொன்முடியின்  பேச்சையடுத்து அவரது கட்சி பதவி பறிக்கப்பட்டது. இருந்தபோதும், அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. அதேபோல, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் ஒன்றிய திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு 

கோவில்பட்டி மத்திய ஒன்றிய திமுக சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு நீர்மோர் பந்தல் திறப்பு விழா பசுவந்தனை ரோடு நாடார் மேல்நிலைப்பள்ளி எதிர்புறம் நடைபெற்றது.  மத்திய ஒன்றிய செயலாளர் பீக்கிலிப்பட்டி முருகேசன் தலைமை தாங்கினார். நீர் மோர் பந்தலை தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், இளநீர் பழங்கள்,நொங்கு,வெள்ளரிக்காய் வழங்கினார்.  நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர்,நகரச் செயலாளர் கருணாநிதி,மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் அஞ்சல் ஊழியர் சங்க மாநில மாநாடு

அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் 34-வது மாநில மாநாடு கோவில்பட்டியில்  இன்று காலை தொடங்கியது. ஒப்பந்த ஊழியர் சங்க மாநிலத் தலைவர் சிவகுருநாதன் தேசிய கொடியேற்றினார். சம்மேளன கொடியை பொதுச் செயலாளர் ஜனார்த்தன் மஜும்தார் ஏற்றினார். அஞ்சல் 4-ம் பிரிவு அகில இந்திய பொதுச் செயலாளர் சாராங் தபால்காரர் சங்க கொடியை ஏற்றினார். தொடர்ந்து மாநாட்டுக்கு அஞ்சல் 4-ம் பிரிவு மாநிலத் தலைவர் குமரன் தலைமை தாங்கினார். நகர்மன்ற தலைவர் கருணாநிதி, ஆயுள் காப்பீட்டுக் கழக முன்னாள் […]