கோவில்பட்டியில் ஒன்றிய திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

கோவில்பட்டி மத்திய ஒன்றிய திமுக சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு நீர்மோர் பந்தல் திறப்பு விழா பசுவந்தனை ரோடு நாடார் மேல்நிலைப்பள்ளி எதிர்புறம் நடைபெற்றது.
மத்திய ஒன்றிய செயலாளர் பீக்கிலிப்பட்டி முருகேசன் தலைமை தாங்கினார்.
நீர் மோர் பந்தலை தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், இளநீர் பழங்கள்,நொங்கு,வெள்ளரிக்காய் வழங்கினார்.


நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர்,நகரச் செயலாளர் கருணாநிதி,மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சந்தானம்,மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகராஜ்,மேற்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன்,செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன்,பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ்,மாவட்ட பிரதிநிதி முருகன்,அரசு வழக்கறிஞர் ராமச்சந்திரன்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பொன்னுத்துரை,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாரதி,மாவட்ட தொழில் நுட்ப அணி துணை அமைப்பாளர் பழனிகுமார்,
மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் தங்கமாரியம்மாள்,மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் மேனகா,மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாதேஸ்வரன்,ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் உத்ரகுமார்,ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் பாலம்மாள்,ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி கற்பகம் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை மத்திய ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் செய்திருந்தார்

