கரிசல்குளம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியைக்கு பணி நிறைவு பாராட்டு

கோவில்பட்டி அருகில் கரிசல்குளம் அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சுப்புத்தாய்க்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.
கிராம மக்கள் சார்பில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு கரிசல்குளம் கிராம பஞ்சாயத்து தலைவி சரோஜா பால்ராஜ் தலைமை தாங்கினார். வார்டு உறுப்பினர் சுப்புலட்சுமி முன்னிலை வகித்தார். ஆசிரியை நிர்மலா அனைவரையும் வரவேற்றார்.
கோவில்பட்டி அரசு ஓய்வூதியர் சங்க பொருளாளர் விஜயன் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பால்ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.


பள்ளி மேலாண்மை குழு தலைவி ஆஷா உறுப்பினர்கள் மல்லிகா, மகாலெட்சுமி, ராதிகா, பேபி லதா. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சுப்புராஜ், மாரிச்செல்வம், முத்துமாரியம்மன். பழைய மாணவர் சங்க தலைவர் ராமச்சந்திரன், செயலர் புதியராஜ், பொருளாளர் பாரதி ஆகியோர் 25 ஆண்டுகள் கல்வி சேவை புரிந்து பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியை சுப்புத்தாய்க்கு நினைவு பரிசு வழங்கினார்கள்.
தலைமை ஆசிரியையின் சொந்த செலவில் 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசு பொருட்கள் மாணவ, மாணவிகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உட்பட 75 பேர்களுக்கு வழங்கப்பட்டது..
