அரசு ஊழியர்களுக்கு 9 முக்கிய அறிவிப்புகள் ; மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

தமிழக சட்டசபை இன்றைய கூட்டத்தில் , அரசு ஊழியர்களுக்கு 9 முக்கிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:-
1.அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்படும்
2. அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்புக்கான பனபலன் இந்த ஆண்டே வழங்கப்படும். 01-10-2025 முதல் அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பை சரண் செய்து பனப்பலன் பெறலாம்.
3.அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்படும்.
4. 3 வகையான ஓய்வூதியங்கள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு செப்டம்பரில் அறிக்கை அளிக்கும்.
5. அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி தொழில்நுட்பக் கல்லூரி படிப்புக்காக ரூ.1 லட்சம், கலை அறிவியல் படிப்புக்கு ரூ.50 ஆயிரம் முன்பணம் வழங்கப்படும்.
6.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிக்காலத்தில் தேவை அடிப்படையில் திருமண முன் பணம் தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்
7.பொங்கல் போனஸ் ரூ.500-ல் இருந்து ரூ.1,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
8. ஓய்வூதியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
9. பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு காலங்கள் பதவி உயர்வுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.”


