• May 20, 2025

Month: April 2025

வேளாண்மை

வருமானத்தை அள்ளித்தரும் `டிராகன்’ பழங்கள் சாகுபடி

பல்வேறு மருத்துவ குணங்களோடு அபாரமான சுவையும் கொண்டிருப்பதால், டிராகன் பழத்திற்கு மார்க்கெட்டில் நல்ல டிமாண்ட், இதனால் விலை சற்று கூடுதலாக இருந்தாலும் சமீப காலமாக மக்கள் டிராகனை விரும்பி வாங்குகிறார்கள். .பெரு நகரங்கள் மட்டுமல்ல  சிறிய நகரங்கள் வரை டிராகனுக்கு மவுசு உள்ளது.மெக்சிகோ நாட்டை தாயகமாக கொண்ட இந்த டிராகன் பழம் வறண்ட கள்ளி இனத் தாவரமாகும். டிராகன் உற்பத்தியில் வியட்நாம் முதலிடத்தில் உள்ளது.நம்முடைய நாட்டில் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் பிற மாநிலங்களில் பயிரிடப்பட்டு வருகிறது.தமிழகத்தில் விருதுநகர், […]

செய்திகள்

கோவில்பட்டியில் தெப்பதிருவிழா; தெப்பத்தில் 9 முறை சுற்றிவந்த புஷ்பரதம்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோவில் பங்குனிப் பெருந்திருவிழா கடந்த, 5-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து தினமும் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை வேளையில் சுவாமி -அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியாக 13-ந்தேதி தேரோட்டம், 14-ந்தேதி தீர்த்தவாரி முடிந்து இன்று செவ்வாய்க்கிழமை தெப்ப திருவிழா நடைபெற்றது.  காலை 10 மணியளவில் கோவிலில் சுவாமி அம்பாளுக்கு விசேஷ அபிஷேகம், தீபாராதனை நடந்தது.மாலை […]

கோவில்பட்டி

பாளையங்கோட்டை பள்ளியில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய மாணவர்

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில்  தனியார் பள்ளி 4 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின்னர் இன்று காலை செயல்பட தொடங்கியது. பள்ளி வகுப்பறைகளில் மாணவர்களும், ஆசிரியர்களும் தமது அன்றாட பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, 8ம் வகுப்பு மாணவர் ஒருவரை , சக மாணவரே அரிவாளால் வெட்டிய சம்பவம் அரங்கேறியது. இந்த தாக்குதலை தடுக்க அங்கே இருந்த ஆசிரியர் முயன்றபோது . அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.தாக்குதலில் படுகாயம் அடைந்த மாணவர் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். […]

கோவில்பட்டி

திடீர் தடை: ஓடாத ராட்டினங்களை வேடிக்கை பார்த்து செல்லும் மக்கள்; களை இழந்த

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி திருவிழா என்பது கோவில்பட்டி மட்டுமின்றி சுற்று வட்டார மக்களுக்கு மறக்க முடியாத திருவிழா ஆகும். பங்குனி மாத இடையில் தொடங்கி சித்திரையில் தேரோட்டம் கண்டு தீர்த்தம் கொண்டாடி தெப்ப திருவிழாவுடன் நிறைவு பெறும். ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவிழாவின்போது மக்கள் ஒன்று கூடி தேர் இழுப்பதில் தொடங்கி தொடர்ந்து 3 நாட்கள் களைகட்டும். கோவில் மைதானத்தில் ராட்டினங்களில் ஏறி மகிழும் சிறுவர் சிறுமியர்கள் மட்டுமின்றி பெரியவர் களும் அடங்குவர். பல […]

கோவில்பட்டி

கோவில்பட்டி கல்லூரியில் விண்வெளி அறிவியல் கருத்தரங்கு

கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப்  சார்பில் விண்வெளி அறிவியல் குறித்த கருத்தரங்கு நடந்தது. தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளர் முத்துமுருகன் தலைமை தாங்கினார். கல்லூரி இயற்பியல் துறை தலைவர் சசீதா, வணிக மேலாண்மை துறை தலைவர் விஜய கோபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். .கருத்தரங்கை கல்லூரி முதல்வர் செல்வராஜ் தொடக்கி வைத்தார் திருச்சி நேரு நினைவு கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியரும், 5000 இடங்களில் […]

கோவில்பட்டி

ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் அன்னதானம்

கோவில்பட்டி ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு மாதமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது அந்த வகையில் 44-வது அன்னதானம் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவில் பங்குனி உத்திர சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு பாத்தியப்பட்ட மங்கள விநாயகர் கோவில் முன்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில்பட்டி நகராட்சி கமிஷனர் கமலா தலைமை தாங்கினார். பராசக்தி மேட்ச் இண்டஸ்ட்ரீஸ் தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.. போக்குவரத்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்வகுமார், கிராம […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் தீ தொண்டு நாள் வாரவிழா

தீ விபத்தில்லா உலகை உருவாக்கிடவும், தீ  விபத்தின் போது பணிபுரிந்து உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களை நினைவு கூறவும்,தீயணைப்பு வீரர்களின் சேவையை பாராட்டவும், ஆண்டுதோறும் ஏப்ரல் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை தீ தொண்டு நாள் வாரவிழா கடைபிடிக்கப்படுகிறது. கோவில்பட்டியில் நடந்த தீ தொண்டு நாள் நிகழ்விற்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் தாமோதரகண்ணன் தலைமை தாங்கினார். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை கோவில்பட்டி நிலைய அலுவலர் ராஜேந்திரன்,ரோட்டரி சங்க செயலாளர் ராஜமாணிக்கம் […]

செய்திகள்

தேசிய ஜனநாயக கூட்டணியில் தினகரன், ஓ.பன்னீர்செல்வம் நீடிப்பார்கள்; பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை சமீபத்தில் மாற்றப்பட்டார். கட்சியின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அண்ணாமலைக்கு தற்போது தேசிய அளவில் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் 9 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,. அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு ஏதுவாக அண்ணாமலை மாற்றப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில்,  தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நயினார் நாகேந்திரன் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- 2026 சட்டமன்ற தேர்தலில் டிடிவி […]

செய்திகள்

ரூ.3 கோடி மோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை: கவர்னர்

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதற்கு தடைவிதிக்க கோரி ராஜேந்திர பாலாஜி சார்பில் வக்கீல் ஏ.வேலன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பங்கஜ் மித்தல், எஸ்.வி.என். பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு […]

கோவில்பட்டி

20 க்கும் மேற்பட்டோர் ரத்ததானம்

துரைமுருகன் ரத்ததான கழகம் நடத்தும் முதலாம் ஆண்டு ரத்ததான முகாம் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்றது. ரத்ததான கழகம் தலைவர் சுதன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் ஜானகிராம், ராஜவேல், முகமது அலி, கார்த்திகேயன், பாலமுகுந்தன்,கார்த்திக் முத்து,சஞ்சய்குமார், தேவிமுனியசாமி, ஜீவ அனுக்கிரக அறக்கட்டளை ராஜேந்திரன்,மகேஷ்,காளி,கருப்பசாமி மற்றும் மருத்துவர் துளசி லெட்சுமி தலைமையில் மருத்துவக் குழுவினர் பாலாஜி, கனகலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் 20க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர்