கோவில்பட்டியில் தீ தொண்டு நாள் வாரவிழா

தீ விபத்தில்லா உலகை உருவாக்கிடவும், தீ விபத்தின் போது பணிபுரிந்து உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களை நினைவு கூறவும்,தீயணைப்பு வீரர்களின் சேவையை பாராட்டவும், ஆண்டுதோறும் ஏப்ரல் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை தீ தொண்டு நாள் வாரவிழா கடைபிடிக்கப்படுகிறது.
கோவில்பட்டியில் நடந்த தீ தொண்டு நாள் நிகழ்விற்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் தாமோதரகண்ணன் தலைமை தாங்கினார்.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை கோவில்பட்டி நிலைய அலுவலர் ராஜேந்திரன்,ரோட்டரி சங்க செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோவில்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் பணிபுரியும் தீயணைப்பு வீரர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது.
இதில் பொது மக்களுக்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. கோவில்பட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் நாராயணசாமி, நடராஜன், முத்துமுருகன்,ராஜேந்திரன்,பழனிக்குமார், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலர் (போக்குவரத்து) மலையாண்டி,முன்னணி தீயணைப்பு வீரர் இசக்கிராஜா உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.


