Month: November 2024

செய்திகள்

பல்லடம் அருகே மகனுடன் தாய், தந்தை படுகொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேமலைகவுண்டம்பாளையம் கிராமத்தில் தெய்வ சிகாமணி, அலமாத்தாள் என்ற வயதான தம்பதி தங்களது தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனர். இவர்களது மகன் செந்தில் குமார்., இவர் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் கோவையில் வசித்து வந்தார். நேற்று  செந்தில்குமார் தனது தாய் மற்றும் தந்தையுடன் தோட்டத்து வீட்டில் இருந்தார். அங்கு வந்த மர்ம நபர்கள் 3 பேரையும் ஆயுதங்களால் தாக்கிஎதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர். இதை தொடர்ந்து வீட்டில் […]

பொது தகவல்கள்

பஞ்சம் போக்கிய நெல் ரகம் ஐ.ஆர்.- 8

இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலகெங்கும் அடிக்கடி ஏற்பட்ட பஞ்சத்துக்குத் தீர்வாகக் கண்டுபிடிக்கப்பட்ட அருமருந்து இந்த ஐ.ஆர்.8 நெல் ரகம். அரிசியை வெறும் உணவு என்று மட்டும் கடந்து சென்றுவிடமுடியாது. அரிசியின் வரலாற்றில் அவல அரசியலும் சுயநலம் மிகுந்த துரோகமும் கறுப்பின அடிமைகளின் துயர் மிகுந்த வாழ்வும் ஒருங்கே இழையோடியுள்ளன.  நாகரிகம் வளர வளர எதை உண்பது என்பதை மனிதன் தேர்ந்தெடுத்து உண்ணத் தொடங்கினான். காட்டிலும் மேட்டிலும் இயற்கையாக முளைத்ததைச் சாப்பிட்ட மனிதன், தனக்கு வேண்டியதைத் தான் […]

தூத்துக்குடி

தூத்துக்குடி தொழிற்பயிற்சி நிலையங்களில் உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்ட ஐடிஐ மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில்  தமிழக உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் எம்.பி. விஜயக்குமார் ஆய்வு நடத்தினார். வேப்பலோடை அரசு தொழிற்பயிற்சி நிலையம், புளியமரத்து அரசரடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகியவற்றை ஆட்சியர் க. இளம்பகவத் முன்னிலையில், ஆய்வு செய்த அவர், வேப்பலோடை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள தொழில் மையத்தில் மாணவர்களுக்கு கற்றுத் தரப்படும் பல்வேறு தொழில் பயிற்சிகளைப் பார்வையிட்டார். பின்னர், அங்குள்ள மாணவர்களுடன் கலந்துரையாடி, புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாடு குறித்து மாணவர்கள் மற்றும் […]

செய்திகள்

கோவில்பட்டி பள்ளியில் வருமானவரி பிடித்தம் பணம் மோசடி; தலைமை ஆசிரியர் முன்ஜாமீன் மனு

கோவில்பட்டியில் அரசு உதவி பெறும் நாடார் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களின் வருமானவரி பிடித்தம் செய்யப்பட்ட பணம் வங்கியில் செலுத்தப்படாமல் போலி வங்கி செல்லான் மற்றும் போலி ரசீது கொடுத்து ஏமாற்றப்பட்டது கடந்த ஆகஸ்டு மாதம்  7-ந்தேதி   கண்டுபிடிக்கப்பட்டது. 4 ஆண்டுகளாக இது போல் பணம் வசூலிக்கப்பட்டு வங்கியில்  செலுத்தப்படாமல் ரூ.1 கோடிக்கும் மேல் மோசடி செய்யப்பட்ட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும்   மேற்கு போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ் மீது புகார் […]

செய்திகள்

பாதுகாப்பு விதிகளை புறக்கணித்துக் கட்டிய பாம்பன் பாலம்; வெங்கடேசன் எம்.பி.கண்டனம்

மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- பாம்பன் பாலம் 1914-ல் கட்டப்பட்டது. அது அன்றைய காலத்தில் ஒரு பொறியியல் அதிசயமாகும். அதற்கு பதிலாக புதிய பாலம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுமானத்தில் நடந்துள்ள மோசடியை ரெயில்வே பாதுகாப்பு ஆணையரே கடுமையாக விமர்சித்துள்ளார். உதாரணமாக தூக்குப்பாலப் பகுதி ரெயில்வேயில் ஆராய்ச்சி வடிவம் மற்றும் தர நிர்ணய அமைப்பின் (RDSO) எந்தவிதமான ஒப்புதலும் இல்லாமல் வேறு வடிவமைப்பு விதிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அவர் […]

செய்திகள்

மாநாட்டின் போது உயிரிழந்த தவெக தொண்டர்களின் குடும்பத்தினருக்கு விஜய் நிதியுதவி

விழுப்புரம், விக்கிரவாண்டி வி.சாலையில் கடந்த அக்டோபர் 27-ம் தேதி தமிழக வெற்றி கழக முதல் மாநில மாநாடு நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பொதுமக்கள் தொண்டர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். மாநாட்டிற்கு வருகை தரும் பொழுதும், மாநாட்டில் பங்கேற்று வீடு திரும்பிய போதும் விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். திருச்சியை சேர்ந்த விஜய் கலை, சீனிவாசன் மற்றும் சென்னையை சேர்ந்த வசந்தகுமார், ரியாஸ் மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த உதயகுமார் ஆகியோர் விபத்தில் உயிரிழந்தனர். […]

கோவில்பட்டி செய்திகள்

கோவில்பட்டி சொர்ணமலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கை: அறநிலையதுறை அதிகாரிக்கு கோட்டாட்சியர்

கோவில்பட்டி சொர்ணமலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சுற்றுலாத்தலமாக செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கும்படி கோட்டாட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.கோவில்பட்டியின் அடையாளங்களில் ஒன்றாக சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவில் உள்ளது. இந்த மலைக்குன்றின் அடிவாரத்தில் நிறைய வீடுகள் உள்ளன. செண்பகவல்லி அம்மன் கோயிலுக்கு சொந்தமாக நூற்றுக்கணக்கான ஹெக்டேர் நிலப்பரப்பு உள்ளது. சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயில் மலைப்பகுதியின் பரப்பு 129 ஏக்கர், 34 சென்ட் ஆகும். இக்கோயில் மலைப் பகுதியில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் இருந்து வந்தன. கடந்த 2008-ம் ஆண்டு சுமார் 5 […]

சினிமா

சிவகார்த்திகேயனை கெளரவித்த சென்னை ராணுவ பயிற்சி மையம்

கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கடந்த தீபாவளியன்று வெளியான படம் அமரன். இந்த படம் வீரமரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியிருந்த நிலையில் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். அவரது மனைவியாக சாய் பல்லவி நடித்திருந்தார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திரைத்துறையிலிருந்தது […]

செய்திகள்

வங்கதேச இந்து தலைவர் கைது விவகாரம்: மத்திய அரசு நடவடிக்கை எடுக்க மம்தா

வங்கதேச இந்து தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நாங்கள் மத்திய அரசோடு இருக்கிறோம் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேற்கு வங்க சட்டப்பேரவையில் பேசிய மம்தா பானர்ஜி, “எந்த மதமும் பாதிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்பின் மூத்த துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டதை அடுத்து, இஸ்கான் அமைப்பினருடன் பேசினேன். இது […]