• May 20, 2024

Month: December 2023

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வெள்ள பாதிப்பு பகுதிகளை உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த அதிகனமழையின் காரணமாகவும், தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாகவும் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. ஸ்ரீ வைகுண்டம் வட்டம் முறப்பநாடு பகுதியில் மருதூர் மேல்க்கால்வாய் இருந்து பக்கப்பட்டி வழியாக செல்லும் பாசனக் கால்வாயில் அதிக நீர்வரத்து காரணமாகப்  பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (25.12.2023) நேரில் பார்வையிட்டார். ,விவசாயிகளிடம் பயிர் சேதங்கள்  குறித்து கேட்டறிந்தார்.  பின்னர் பெருங்குளம் பேரூராட்சி நடுவூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களை  சந்தித்து, சேத விவரங்களை […]

கோவில்பட்டி

வெள்ளம் பாதித்த ஓட்டப்பிடாரம் பகுதியில் பா.ஜ.க. நிர்வாகிகள் 500 பேருக்கு  நிவாரண பொருட்கள்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் வெங்கடேசன் சென்ன கேசவன் தலைமையில். மாவட்ட பொது செயலாளர் வேல் ராஜா முன்னிலையில் 10 நாட்களாக தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த இடங்களுக்கு நேரடியாக சென்று வெள்ள நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் உள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவும், cமளிகை பொருட்களும் வழங்கப்பட்டன. மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் உடன்இணைந்து இந்த பணியில் ஈடுபட்டனர்.  தற்போது ஓட்டப்பிடாரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாஜக நிர்வாகிகளுக்கு அத்தியாவசிய தேவை பொருட்கள் அடங்கிய `மோடிகிட்` சுமார் 500 […]

செய்திகள்

நகைச்சுவை நடிகர் ‘போண்டா’ மணி மரணம் ; குடும்பத்துக்கு விஜயகாந்த் நிதி உதவி 

நகைச்சுவை நடிகர் போண்டாமணி காலமானார். 2 சிறுநீரகங்களும் செயலிழந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று தனது வீட்டில் திடீரென மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். அவருக்கு வயது 60. போண்டா மணிக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகர் போண்டா மணி, 1991ம் ஆண்டு வெளியான நடிகர் பாக்யராஜின் ‘பவுனு பவுனுதான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதனை தொடர்ந்து ‘சுந்தரா டிராவல்ஸ்’, ‘மருதமலை’, […]

கோவில்பட்டி

அன்னதான விழா : சாப்பிட்ட இலையில் ஐயப்ப பக்தர்கள் அங்கபிரதட்சணம் 

 கோவில்பட்டி லோக்வீர் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் 49-வது ஆண்டுமண்டல பூஜை மற்றும் மஹா அன்னதானம் நடைபெற்றது. இதையொட்டி காலை 5 மணிக்கு காயத்ரி வித்யாலய மண்டபத்தில் வைத்து சாஸ்தா ஹோமம் விஷேச அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது .  அதனைத் தொடர்ந்து  காலை 9 மணிக்கு செண்பகவல்லி அம்மன் கோவிலில் எழுந்தருளியிருக்கும்  ஸ்ரீ ஹரிஹரபுத்ர ஐயப்ப ஸ்வாமிக்கு விசேஷ அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பகல் 12மணிக்கு மஹா அன்னதானம் நடைபெற்றது. ஏராளமானவர்கள் கலந்து […]

தூத்துக்குடி

மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் வெள்ள நீர் வெளியேற்றல் ஆலோசனை கூட்டம்; ராஜ கண்ணப்பன்

 தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வெள்ள நீரை விரைவாக வெளியேற்றுவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  உயர்கல்வித்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மாப்பிள்ளையூரணி ஊராட்சிமன்ற தலைவர் சரவணக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வசந்தா, ஹெலன் பொன்மணி, தி. மு. க.மாநில மகளிரணி சமூக வலைதள பொறுப்பாளர் ரத்ணா லோகேஷ்வரன், தூத்துக்குடி மத்திய ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி, அரசு அலுவலர்கள், காவல்துறை […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் வெள்ள சேத பகுதிகளை தலைமைச் செயலாளர் பார்வையிட்டார்

 தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த அதிகனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இன்று நேரில் பார்வையிட்டார். மறவன்மடம் ஊராட்சி அந்தோனியார்புரம் பாலத்தினை தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து, அப்பகுதி மக்களிடம் வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் தூத்துக்குடி  பைபாஸ் பாலம் அருகில் செங்குளம் ஓடையிலிருந்து உப்பார் ஓடைக்கு செல்லும் மழை நீர் வடிகாலினை நேரில் பார்வையிட்டார். அதிகனமழை  காரணமாக பாதிக்கப்பட்ட தமிழ்ச்சாலைப் பகுதிகளை […]

தூத்துக்குடி

மழை வெள்ளம் நிவாரணம் : தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலராக செந்தில்ராஜ் நியமனம்

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது :- கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்திற்கும், திருநெல்வேலி மாவட்டத்திற்கும் உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக சிறப்பு அலுவலர்களை நியமிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு கி.செந்தில்ராஜ், ஒருங்கிணைப்பு அலுவலராக தூத்துக்குடியில் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தொலைபேசி எண். 7397770020. பாதுகாப்பு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கும் மையமாக தூத்துக்குடியில் உள்ள உள் விளையாட்டரங்கம் செயல்படும். தூத்துக்குடியில் உள்ள இந்தக் கட்டுப்பாட்டு அறை பொறுப்பு […]

கோவில்பட்டி

கோவில்பட்டி சுந்தர்ராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி

 கோவில்பட்டியில் உள்ள நீலா தேவி பூதேவி உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு  இன்று அதிகாலை 4:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.  5 மணிக்கு திருமஞ்சனம், 6 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் அதிக அளவில் திரண்டு  இருந்தனர்.   காலை 6 மணிக்கு சுந்தர்ராஜ பெருமாள் சயன கோலத்தில்  எழுந்தருளினார். பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.  கோவில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, அறங்காவலர் குழு தலைவர் […]

தூத்துக்குடி

தூத்துக்குடி கருத்தக்கண் பாலம் பகுதியில் வெள்ள நீர் வெளியேற அமைச்சர் கீதாஜீவன் அதிரடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ந் தேதி பெய்த அதிகனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தூத்துக்குடி  கோரம்பள்ளம் குளத்திலும் திடீர் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குளத்தின் தண்ணீர் தூத்துக்குடி-பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள பாலம் வழியாக பாய்ந்து ஓடியது. மழை வெள்ளம் ஊருக்குள் புகுந்து பெரும்பாலான தெருக்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. முத்தம்மாள் காலனி, ஆதிபராசக்தி நகர், தனசேகரன் நகர், நிகிலேசன் நகர், புஷ்பாநகர், கதிர்வேல் நகர், ராஜீவ்நகர், தபால் தந்தி காலனி, ஸ்டேட் வங்கி காலனி, இந்திராநகர், போல்டன்புரம், […]

கோவில்பட்டி

சேதம் அடைந்த பயிர்களுக்கு நிவாரண தொகை: எட்டயபுரம் தாசில்தாரிடம் பா.ஜனதா கோரிக்கை

கனமழை காரணமாக பெரும் சேதம் அடைந்த அனைத்து பயிர்களுக்கும் உடனடியாக கணக்கெடுத்து நிவாரணத் தொகை வழங்க கோரி எட்டயபுரம் தாசில்தாரிடம் பா.ஜனதா சார்பில் மனு அளிக்கப்பட்டது. மேலும்  உயிரிழந்த கால்நடைகளுக்கு நிதி, இடிந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். துண்டிக்கப்பட்ட அனைத்து சாலைகள் பாலங்கள் ஆகியவற்றை விரைந்து சீரமைக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டு இருந்தது. மாவட்ட பா.ஜனதா செயலாளர் ஆத்திராஜ், மாவட்ட துணைத் தலைவர் சேது ராஜ், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் கந்தசாமி, […]