Month: November 2023

கோவில்பட்டி

கோவில்பட்டி கோவிலில் திருகார்த்திகை பூஜை

கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோட்டில்  உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் திரு கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி வெற்றி விநாயகர், முத்துமாரியம்மன், சந்தன கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு பரணி தீபம் இரவு 7 மணிக்கு திருகார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. பூஜைகளை சுப்ரமணிய சுவாமி செய்தார். சுற்று வட்டார மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் தலைவர் தங்கவேல், செயலாளர் மாரிச்சாமி, […]

கோவில்பட்டி

சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவிலில் கார்த்திகை மகாதீபம்

கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவிலில் நேற்று மாலை திருகார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. மகா  இதையொட்டி மாலையில் பகதர்கள் குவிந்தனர். கோவில் மண்டபத்தில் மகாதீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கோவில் மண்டபத்தில்  முருகப்பெருமான்  சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அவருக்கு முன்பாக ராட்சத விளக்கு வைக்கப்பட்டு எண்ணெய் நிரப்பப்பட்டு இருந்தது. மேலும் பக்தர்கள் எண்ணெய் வாங்கி வந்து ஊற்றினார்கள். இந்த கோவிலில் முருகபெருமான் சிலை கிடையாது. முருகனின் ஆயுதமான வேல்  மூலவராக காட்சி அளிக்கிறது. அந்த […]

கோவில்பட்டி

ஓடைப்பட்டி விநாயகர் கோவிலில் கார்த்திகை தீப விளக்குகள்

 கோவில்பட்டி அடுத்த ஓடைப்பட்டி  வன்னி விநாயகர் கோவிலில்  இன்று மாலை கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு கோவில் முழுவதும் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது.  மேலும் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. கோவில் குருக்கள் பிரசன்ன வெங்கடேஷ் செய்து இருந்தார்.  மேலும் கோவிலுக்கு வெளியே சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

செய்திகள்

குளறுபடி இல்லாத வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்; டி. ஜெயக்குமார்

அ.தி.மு.க வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டத்திற்குட்பட்ட வாக்காளர் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாமை, சென்னை காசிமேடு, புனித தெரேசா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது :- தேர்தல் நேரத்தில்தான் இறந்தவர்கள் உயிரோடு வருகிறார்கள். தேர்தல் ஆணையத்துக்கு கட்சிகள் ஒத்துழைப்பு தருகிறோம். இறந்தவர்கள், இடமாற்றம் ஆனவர்களை நீக்கிவிட வேண்டும் ஒவ்வொரு முறையும் எழுதி கொடுத்து கொண்டே இருப்பதுதான் எங்கள் வேலையா. குளறுபடியில்லாத 100 சதவீதம் சரியான வாக்காளர் […]

செய்திகள்

காங்கிரஸ் தலைவர் அழகிரிக்கு எதிராக நெல்லை மகளிர் அணியினர்போராட்டம்

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று நெல்லை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் பூத் கமிட்டி உறுப்பினர்கள் பயிற்சி கூட்டத்தில் கலந்து கொள்ள நெல்லை வந்தார்.  இந்நிலையில் மகளிர் காங்கிரஸ் மாநில இணைச்செயலாளர் கமலா தலைமையில் அணி நிர்வாகிகள் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு அமைந்துள்ள காமராஜர், இந்திராகாந்தி சிலை முன்பு. 50-க்கும் மேற்பட்டோர் கருப்பு சேலையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் கட்சி அலுவலகம் வாசல் முன்பு […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்; பணிநியமன ஆணைகளை  கீதாஜீவன் வழங்கினார்

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தனியார் துறை வேலைவாய்ப்பு ,முகாம் இன்று  (சனிக்கிழமை) நடைபெற்றது. மாவட்ட நிர்வாகம்,மாவட்ட வேலைவாய்ப்பு , தொழில்நெறி வழிகாட்டும் மையம் , தமிழ்நாடு மாநில ஊரக/நகர்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து சிறப்பு தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமை நடத்தின. முகாமில் 100-க்கும் மேற்பட தொழில் நிறுவனங்ககளை சேர்ந்தவர்கள் வந்திருந்து பணியாளர்களை  தேர்வு செய்தனர். தூத்துக்குடி மற்றும் பக்கத்து ஊர்களில் இருந்து […]

கோவில்பட்டி

திருச்சியில் மாநில அறிவியல் மாநாடு: கோவில்பட்டியில் இருந்து இளம் விஞ்ஞானிகள் பயணம்

மாநில அளவிலான 31-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு திருச்சியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் தூத்துக்குடி மாவட்ட இளம் விஞ்ஞானிகள் வழியனுப்பும் நிகழ்ச்சி கோவில்பட்டி காந்தி மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் பேராசிரியர் சுரேஷ்பாண்டி தலைமை தாங்கினார். யு.பி.,மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி முதல்வர் அமுதவள்ளி, அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை சாந்தகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், இல்லம் தேடி கல்வி […]

தூத்துக்குடி

300 பெண்களுக்கு திருமண நிதிஉதவி

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருமண நிதிஉதவி திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. ஈவேரா மணியம்மை நினைவு விதவை மகள் திருமண நிதியுதவி திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவி திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவி திட்டம் மற்றும் டாக்டர் தர்மாம்பாள் நினைவு விதவை மறுமண நிதியுதவி திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் 300 பெண்களுக்கு திருமாங்கல்யத்திற்கு தங்கம் மற்றும் நிதியுதவியை அமைச்சர் […]

ஆன்மிகம்

நாளை கார்த்திகை தீபதிருவிழா; திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது?

சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். நினைத்தாலே முக்தி தரும் புண்ணிய தலமாக போற்றப்படுகிறது இந்த தலம். இங்கு சிவபெருமானே மலையாக வீற்றிருந்து காட்சி தருவதாக ஐதீகம். எனவேதான், பக்தர்கள் இந்த மலையை வலம் வந்து (கிரிவலம்) சிவபெருமானை வணங்குகின்றனர். குறிப்பாக பவுர்ணமி நாளில் கிரிவலம் வருவது மகத்துவம் வாய்ந்தது. பல்வேறு நகரங்களிலிருந்தும் ஊர்களிலிருந்தும் எண்ணற்ற சித்தர்கள் இந்நகருக்கு வந்து வாழ்ந்து சமாதியடைந்துள்ளார்கள். அவர்களில் ரமணர், சேசாத்திரி சாமிகள், விசிறி சாமிகள், […]

கோவில்பட்டி

மாணவர்களுக்கு டெலஸ்கோப் பயிற்சி

கோவில்பட்டியில் அஸ்ட்ரோ கிளப் சார்பில் புது ரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு டெலஸ்கோப் பயிற்சி அளிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் முத்து முருகன் தலைமை தாங்கினார். நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் சுப்பாராயன் முன்னிலை வகித்தார்.அறிவியல் ஆசிரியர் சீனிவாசகன் வரவேற்றார். தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி செயற்குழு உறுப்பினர் முத்துசாமி மாணவர்களுக்கு வானியல் கருத்துக்களை பரப்புவதற்கும், தொலைதூர பொருட்களை டெலஸ்கோப்பில் பார்வையிடுவதற்கும் பயிற்சி அளித்தார்.