• May 20, 2024

குளறுபடி இல்லாத வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்; டி. ஜெயக்குமார் பேட்டி 

 குளறுபடி இல்லாத வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்; டி. ஜெயக்குமார் பேட்டி 

அ.தி.மு.க வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டத்திற்குட்பட்ட வாக்காளர் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாமை, சென்னை காசிமேடு, புனித தெரேசா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது :-

தேர்தல் நேரத்தில்தான் இறந்தவர்கள் உயிரோடு வருகிறார்கள். தேர்தல் ஆணையத்துக்கு கட்சிகள் ஒத்துழைப்பு தருகிறோம். இறந்தவர்கள், இடமாற்றம் ஆனவர்களை நீக்கிவிட வேண்டும் ஒவ்வொரு முறையும் எழுதி கொடுத்து கொண்டே இருப்பதுதான் எங்கள் வேலையா. குளறுபடியில்லாத 100 சதவீதம் சரியான வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்.

 ஒரு பக்கம் ஆன்லைனில் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் தங்கள் பணிகளை செய்து வந்தாலும், கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் அ.தி.மு.க சார்பில் இந்த முகாம்கள் தமிழகம் முழுவதும் நடத்துகிறோம். 

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் கார் பந்தயம் நடத்துகிறார்கள். ஆசிரியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற பணம் இல்லை. மருத்துவமனைகளில் மருந்துகள் இல்லை என்று பல பிரச்சினைகள் உள்ளது. இதற்கு காசில்லை. ஆனால் கார் ரேஸ் நடத்த மட்டும் பணம் இருக்கிறதா. அந்த 42 கோடி யார் பணம்?

மழை பெய்து செவ்வாய் கிரகம் மாதிரி குண்டும் குழியுமான சாலைகள் இருக்கிறது. ஆங்காங்கே பள்ளம் தோண்டி வைத்திருக்கிறார்கள். இந்த சாலை போட வக்கிலாத துப்புகெட்ட அரசு, மக்களுடைய வரி பணத்தை எப்படி வேண்டுமானாலும் செலவு செய்யலாமா?

10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது. அமலாக்கத்துறை தன்னிச்சையான அமைப்பு. மடியில் கணம் இல்லை என்றால் பதில் சொல்லிவிட்டு வர வேண்டியதுதானே. ஆட்சியாளர்கள் தவறு செய்ய எதற்கு அதிகாரிகள் துணை போக வேண்டும்

60,000 கோடி ரூபாய் ஆதாரம் இருக்கிறது என்று அக்கட்சியின் நிர்வாகியே சொல்கிறார். அமலக்கத்துறை குடியாத்தம் குமரனிடம் ஆதாரம் கேட்டு விசாரிக்க வேண்டும். மாவட்ட ஆட்சி தலைவர்கள் தவறுக்கு துணை போனது தவறுதானே. 

முதல்வர், தி. மு. க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 40 தொகுதியில் வெற்றி பெறுவோம் என்று பேசி இருப்பது,பூனை வந்து பகல் கனவு காண்பது போல உள்ளது.

40 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என முதல்வர் பேசுவது பகல் கனவு காண்பது போன்றது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான் நாடாளுமன்ற தேர்தலில் 40-க்கு 40-ல் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் அமரும்.

வாழும் சகாப்தமான எம்.ஜி.ஆரின் நினைவு நாளில் நடிகர் சங்கம் கருணாநிதிக்கு விழா எடுப்பது ஏன்?இது வன்மையான கண்டனத்துக்குரியது. தயாரிப்பாளர், நடிகர் சங்கத்தினர் இதை பரிசீலித்து வேறொரு நாளில் அந்த விழாவை எடுக்க முன் வர வேண்டும்.

இவ்வாறு டி. ஜெயக்குமார் கூறினார்.

இன்னொரு பேட்டி 

சென்னை ராயபுரத்தில் நடைபெற்று வரும் முகாம்களை பார்வையிட்டு, பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கிய பின்னர் முன்னாள் அமைச்சர் பி ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது :-

தமிழகத்தில் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பதன் மூலம், மாவட்ட ஆட்சியர்களும், அதிகாரிகளும் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்றால் இது போன்ற அமலாக்கத் துறையின் நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும்.

திமுகவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட குடியாத்தம் குமரன் வெளியிட்ட காணொலியை வைத்து அமலாக்கத்துறை உரிய விசாரணைய நடத்த வேண்டும். 

 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என தமிழக முதலமைச்சர் பேசியிருப்பது ஒரு கானல் நீர் போன்றது, மக்கள் மீது கடுமையான அதிருப்தியை சம்பாதித்து இருக்கும் திமுக இதுபோன்று பகல் கனவுகளை காண வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

 ஒரு கையெழுத்து மூலம் நீட் தேர்வை ரத்து செய்து விடுவோம் எனக் 8p0கூறி ஆட்சிக்கு வந்த திமுக, 50 லட்சம் கையெழுத்துகளைக் கேட்டு வீதி வீதியாக பிரசாரம் செய்து கையொப்பங்களை பெற்று வருகிறது. ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து மீனவர்கள் தாக்கப்படுவதும் உடைமைகள் சேதப்படுத்துவதும் தொடர்கதையாக இருக்கிறது. 

 2024 ஆம் ஆண்டு அதிமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை அனைவரிடத்திலும் ஏற்பட்டு உள்ளது: திமுக மிகப்பெரிய இயக்கம் என்பதை உணர்ந்து மற்ற கட்சிகளில் இருந்து அதிமுகவினை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

 விவசாயி அருண் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பாய்ந்திருப்பது குறித்து இதுவரை எந்த ஊடகமும் வாய் திறக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது.விவசாயி மீது குண்டர் சட்டம் போட்டிருப்பது எந்த ஆட்சியில் நடந்தது இல்லை.

சென்னையை தவிர்த்து பிற கடலோர மாவட்டங்களில் பெய்த கனமழையால் விளைநிலங்கள் கடுமையாக பாதித்தும்,  குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்தும் மக்கள் விவசாயிகள் துன்பத்தில் ஆழ்ந்திருக்கும் நிலையில் எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை.

இவ்வாறு டி.ஜெயக்குமார் கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *