• May 20, 2024

தூத்துக்குடியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்; பணிநியமன ஆணைகளை  கீதாஜீவன் வழங்கினார்

 தூத்துக்குடியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்; பணிநியமன ஆணைகளை  கீதாஜீவன் வழங்கினார்

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தனியார் துறை வேலைவாய்ப்பு ,முகாம் இன்று  (சனிக்கிழமை) நடைபெற்றது.

மாவட்ட நிர்வாகம்,மாவட்ட வேலைவாய்ப்பு , தொழில்நெறி வழிகாட்டும் மையம் , தமிழ்நாடு மாநில ஊரக/நகர்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து சிறப்பு தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமை நடத்தின.

முகாமில் 100-க்கும் மேற்பட தொழில் நிறுவனங்ககளை சேர்ந்தவர்கள் வந்திருந்து பணியாளர்களை  தேர்வு செய்தனர். தூத்துக்குடி மற்றும் பக்கத்து ஊர்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள் முகாமிற்கு வந்திருந்தனர்.

அவர்களை நேர்முக தேர்வு மூலம் தொழில் நிறுவனத்தினர் தேர்வு செய்தனர். இப்படி தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு  பணிநியமன ஆணைகளை  மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் வழங்கினார். மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

காலை 9 மணிக்கு தொடங்கிய முகாம் மாலை 3 மணி அளவில் நிறைவு பெற்றது. பணி நியமன ஆணை பெற்றவர்கள் தவிர நிறைய  பேருக்கு  அந்தந்த நிறுவனங்களுக்கு நேர்முக தேர்வுக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது.

முகாமில் மாவட்ட தொழில் மையம் பொதுமேலாளர் ஐ.ஸ்வர்ணலதா  திருநெல்வேலி மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குனர் சன்முகசுந்தர், மாவட்ட வேலை வாய்ப்பு உதவி இயக்குனர் பேச்சியம்மாள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சையது முகமது,  ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வீரபுத்திரன், திறன் மேம்பாட்டு பயிற்சி உதவி இயக்குனர் ஏஞ்சல் விஜய நிர்மலா  மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *