திருச்சியில் மாநில அறிவியல் மாநாடு: கோவில்பட்டியில் இருந்து இளம் விஞ்ஞானிகள் பயணம்
மாநில அளவிலான 31-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு திருச்சியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் தூத்துக்குடி மாவட்ட இளம் விஞ்ஞானிகள் வழியனுப்பும் நிகழ்ச்சி கோவில்பட்டி காந்தி மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் பேராசிரியர் சுரேஷ்பாண்டி தலைமை தாங்கினார். யு.பி.,மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி முதல்வர் அமுதவள்ளி, அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை சாந்தகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், இல்லம் தேடி கல்வி உதவி திட்ட அலுவலர் செ.நாயகம், விருதுநகர் அரசு டாக்டர் சுதன்,கோவில்பட்டி மின்வாரிய அதிகாரி மாரியப்பன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
தொடக்கத்தில் கல்வி ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் மோகன் வரவேற்று பேசினார். முடிவில் பசுவந்தனை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் முரளி நன்றி கூறினார்.