300 பெண்களுக்கு திருமண நிதிஉதவி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருமண நிதிஉதவி திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
ஈவேரா மணியம்மை நினைவு விதவை மகள் திருமண நிதியுதவி திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவி திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவி திட்டம் மற்றும் டாக்டர் தர்மாம்பாள் நினைவு விதவை மறுமண நிதியுதவி திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் 300 பெண்களுக்கு திருமாங்கல்யத்திற்கு தங்கம் மற்றும் நிதியுதவியை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். மாவட்ட ஆட்சியர். லட்சுமிபதி, திட்ட இயக்குனர் வீரபுத்திரன், மாவட்ட சமூகநல அலுவலர் காயத்ரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
சில பெண்கள் திருமணம் ஆகி கணவர் மற்றும் கைக்குழந்தையுடன் வந்து நிதி உதவியை பெற்று சென்றனர்.