Month: October 2023

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி உரக்கிடங்கில் 66 ஆயிரம் பலன் தரும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி;

தூத்துக்குடி தருவைகுளத்தில் உள்ள மாநகராட்சி உரக்கிடங்கில் இன்று (27.10.2023) தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் இந்திய விமான நிலைய ஆணையம் இணைந்து இந்திய விமான நிலைய ஆணையத்தின் சமூகப் பொறுப்பு நிதியுதவியுடன் சமூக காடு வளர்ப்பு திட்டத்தின்கீழ் ரூ.93 லட்சம் செலவில் 60 ஏக்கர் பரப்பளவில் 66 ஆயிரம் பலன் தரும் மரக்கன்றுகள் மற்றும் கால்நடை தீவனம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.  மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளியில் புத்தக கண்காட்சி

கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளியில் 2 நாட்கள் நடைபெறும் புத்தக கண்காட்சியை மாணவர்களே தொடங்கி வைத்தனர். கண்காட்சியில்  தேசத்தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, அறிவியல், அகராதி, இலக்கியம், கட்டுரை, நாவல் ஆகிய தலைப்புகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. மாணவர்களுக்கான புத்தக கண்காட்சியினை 6-ம்வகுப்பு மாணவிகள் சபிஹா, சாதனா. ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். புத்தக கண்காட்சியினை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பார்வையிட்டனர். மேலும் ஆசிரியர்கள், பொதுமக்கள் பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சிக்கு பள்ளி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். […]

செய்திகள்

அரசு பள்ளிகள், வட்டார வளமையங்களில்  பட்டதாரி ஆசிரியர்கள்,  ஆசிரியர் பயிற்றுநர் காலி பணியிடங்களுக்கான

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில்  காலியாக உள்ள  பட்டதாரி ஆசிரியர்கள்  மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் (BRTE )பணியிடங்களுக்கான UGTRB தேர்வு  அறிவிப்பாணை  வெளியிடப்பட்டுள்ளது. *தமிழ்வழி இட ஒதுக்கீடு 20% *பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு (NOC compulsory) *மாற்றுத்திறனாளிகள் *மூன்றாம் பாலினத்தவர்  69% Reservation என அனைத்து  ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  *காலிப்பணியிடங்கள் -2222 *கல்வித்தகுதி –   BED + TNTET PAPER -2 Pass k *விண்ணப்பம் – Online […]

கோவில்பட்டி

கோவில்பட்டி வ.உ.சி. அரசு பள்ளி பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்; அமைச்சர் அன்பில் மகேஷ்

கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில்  வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று இப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகளை சந்தித்து பேசினார். மாணவர்களை சந்தித்த போது கல்வியில் சிறந்து விளங்க அறிவுரை வழங்கினார். மேலும் பள்ளி வளாகத்தில் உள்ள கல்வித்துறை அலுவலகங்களையும் பார்வையிட்டார். மாணவ மாணவிகளுக்கு வழங்கக்கூடிய விலையில்லா பொருட்கள் சேமிப்பு கிடங்குக்கு சென்று பார்வையிட்டதுடன் அதனுள்ளே இருந்த பொருட்கள் பற்றியும் […]

செய்திகள்

100 சதவீதம் வெளிப்படை தன்மையுடன் வாக்காளர் பட்டியல்; டி.ஜெயக்குமார் கோரிக்கை

மக்களவைத் தேர்தல் தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ  தலைமையில்  சென்னை தலைமைச் செயலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. இதில் பங்கேற்ற அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் முன்னாள்  அமைச்சர் டி.ஜெயக்குமார்  செய்தியாளர்களை சந்தித்த பொது கூறியதாவது:-, ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று எங்களது கருத்துகளை தெரிவித்தோம். கடந்த காலத்தில்  18 வயது நிரம்பியோர் வாக்காளர்களாக விண்ணப்பிக்க ஒருமுறைதான் வாய்ப்பு வழங்கப்பட்டது , தற்போது மூன்று முறை வழங்கப்படுகிறது. வாக்காளர்களின் பெயர் சேர்த்தல் , […]

கோவில்பட்டி

சிதலமடைந்த தொகுப்பு வீடுகளை இடித்து கான்கிரீட் வீடுகள்; கனிமொழி எம்.பி. ஏற்பாடு

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் தெற்கு இலந்தைகுளம் ஊராட்சிக்குட்பட்ட மானங்காத்தான் கிராமத்தை  தத்தெடுத்துள்ளார். 2022 ஏப்ரல் மாதம்  பஞ்சாயத்துராஜ் திட்டத்தையொட்டி தெற்கு இலந்தைகுளம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற கனிமொழி. அந்தக் கிராமத்தை தத்தெடுத்து, முன்மாதிரி கிராமமாக மாற்றும் நோக்கில் தத்தெடுப்பதாக அறிவித்தார். இங்கு  1996 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட காலனி வீடுகள் மிகவும் பழுதடைந்து இருந்தது. சிதிலமடைந்திருந்த தொகுப்பு வீடுகளுக்கு மாற்றாக கான்கிரீட் வீடு வேண்டும் என்று கனிமொழி […]

செய்திகள்

மலையாள திரைப்படத்திற்கு “நடிகர் திலகம்” பெயர் வைப்பதற்கு சிவாஜி பேரவை எதிர்ப்பு                                                                                              

“நடிகர்திலகம்”) என்ற பெயரில் மலையாளத் திரைப்படம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், மலையாள நடிகர்கள் சங்கம் மற்றும் மலையாள திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியவற்றுக்கு நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை தலைவர் கே,சந்திரசேகரன் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- “நடிகர் திலகம்” என்ற பெயரில் மலையாள சினிமா, ஜீன் பால் லால் என்பவருடைய இயக்கத்தில்  தயாராவதாக எங்களுக்கு  தெரியவந்துள்ளது. நடிகர் திலகம் […]

கோவில்பட்டி

தென்மண்டல சப்-ஜூனியர் ஆக்கி: தமிழக ஆண்கள், பெண்கள் அணிக்கு 2-வது இடம்  

தென்மண்டல அளவிலான சப்-ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி போட்டி சென்னையில் நடந்தது. இப்போட்டியில் தமிழ்நாடு , ஆந்திர பிரதேசம., கர்நாடகா, கேரளா , புதுச்சேரி, தெலுங்கானா ஆகிய 6 மாநில அணி வீரர்கள்  கலந்து கொண்டு விளையாடினர்.  பல தடைகளை கடந்து ஆண்கள் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு- கர்நாடகா அணிகள் களம் கண்டன. பரபரப்பான இந்த  ஆட்டத்தில்  கர்நாடக அணி 3-2 என்ற கோல்  கணக்கில்  வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது. தமிழ்நாடு அணி 2-வது […]

செய்திகள்

சிறுபான்மை மக்களின் ஆதரவு அ.தி.மு.க.வுக்கே உள்ளது; முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் சொல்கிறார்

சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள அனைத்து பூத்களிலும் அமைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க.பூத்கமிட்டி, மகளிர் குழு, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை குழு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடனான ஆலோசனை கூட்டம் இன்று காலை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த கூட்டத்தில்  அ.தி.மு.க.அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது:- தி.மு.க. சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெற வேண்டும் என்று பொய் வாக்குறுதிகள் அளித்து இன்று […]

செய்திகள்

தமிழ்நாட்டில் தனியார் மூலம் மின்சார பஸ்கள் இயக்க முடிவு

தமிழ்நாடு அரசால் கொள்முதல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள அதிநவீன தொழில்நுட்ப வசதி கொண்ட மின்சார பஸ்கள் தனியார் நிறுவனங்களால் இயக்கப்பட்டு பராமரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார பஸ்கள் பொது தனியார் கூட்டு மாதிரி கீழ் இயக்கப்படும்,அதில் ஓட்டுநர்கள் தனியார் நிறுவனத்தால் வழங்கப்படும்,நடத்துனர்கள் அரசாங்கத்தால் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு ஒரு கிலோமீட்டர் அடிப்படையில் நிர்ணயித்த கட்டணத்தின் அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் A முதல் B வரை மின்சார பஸ்களை இயக்கும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2026 […]