• May 9, 2024

Month: August 2023

செய்திகள்

தேர்தல் நெருங்கும்போது தி.மு.க. கூட்டணியில் இருந்து பல கட்சிகள் வெளியேறும்; டி. ஜெயக்குமார்

சென்னை ராயபுரத்தில் உள்ள பெரியபாளையத்தம்மன் திருக்கோவில் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு நடந்த கூழ் வார்த்தல் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்து கொண்டு பக்தர்களுக்கு கூழ் ஊற்றினார்.இதனைத் தொடர்ந்து ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் கலந்து கொண்டார்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது :-திமுக ஆட்சியில் கஞ்சா , கள்ளச்சாராயம் சாதாரணமாகிவிட்டது. காவல்துறை நடவடிக்கை எடுத்தால் , அவர்கள் அடி உதை வாங்கும் நிலை உள்ளது. சர்வாதிகாரியாக மாறுவேன் என்று கூறும் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் மாநில யோகாசன போட்டி; கடம்பூர் ராஜு பரிசு வழங்கினார்

தமிழ் கல்சுரல் மற்றும் யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் சார்பில் மாநில அளவிலான யோகாசன போட்டி கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம்.கலை, அறிவியல் கல்லூரியில் இன்று 26-ந் தேதி நடைபெற்றது. தமிழ்நாடு யோகா விளையாட்டு வளர்ச்சி கழக பொதுசெயலாளர் எம்.மாரியப்பன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் எஸ்.கண்ணன், கல்லூரி முதல்வர் டாக்டர் செல்வராஜ், தமிழ் கல்சுரல் மற்றும் யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் அழகுதுரை, துணை தலைவர் கிருஷ்ணவேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியை கல்லூரி தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம் தொடக்கி வைத்தார். போட்டியில் […]

செய்திகள்

மனைவியை எரித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

தென்காசி அருகே பாலமார்த்தாண்டபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னுத்துரை (வயது 44). இவர் அப்பகுதியில் ஒரு மெடிக்கல் கடையில் ஊழியராக வேலை செய்தார். இவருக்கும், பக்கத்து ஊரான திருமலாபுரத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகள் லலிதாவுக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. பின்னர் பொன்னுத்துரை தனது மனைவி லலிதாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதனால் லலிதா தனது பெற்றோரின் வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் கடந்த 5.7.2014 அன்று பொன்னுத்துரை […]

செய்திகள்

மதுரையில் சுற்றுலா ரெயில் பெட்டியில் தீவிபத்து; 9 பேர் பலி

உத்தர பிரதேச மாநில பயணிகளை ஏற்றி கொண்டு சுற்றுலா ரெயில் ஒன்று கடந்த 17-ந்தேதி தமிழகம் வந்தடைந்தது. மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவில் மதுரை போடி லைன் பகுதியில் சுற்றுலா ரெயிலின் இரண்டு பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இன்று காலையில் ஒரு ரெயில் பெட்டி திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது, ரெயிலில் கடைசியாக இருந்த சிறப்பு முன்பதிவு ரெயில் பெட்டியில் 90 பேர் இருந்தனர். தீ விபத்து பற்றி […]

தூத்துக்குடி

தூத்துக்குடி கோரம்பள்ளம் ஆற்றின் குறுக்கே புதிதாக சிறு பாலங்கள்; ஆட்சியர் பார்வையிட்டார்

தூத்துக்குடி வட்டம் வீரநாயக்கன்தட்டு, அத்திமரப்பட்டி மற்றும் காலாங்கரை ஆகிய பகுதிகளில் நீர்வளத்துறையின் சார்பில் கோரம்பள்ளம் வடிநிலக் கோட்டத்தின் மூலம் கோரம்பள்ளம் ஆற்றில் (உப்பாத்து ஓடை) ரூ.5 கோடி செலவில்  சிறுபாலங்கள், வெள்ளப் பாதுகாப்பு தடுப்பு சுவர்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. மேலும் உள்வாங்கிகள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  இதில், வீரநாயக்கன்தட்டு அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிறுபாலங்களை.மாவட்ட ஆட்சியர் .கி.செந்தில்ராஜ், இன்று (26.8.2023) நேரில் பார்வையிட்டு  ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, செயற்பொறியாளர் (கோரம்பள்ளம் வடிநிலக் கோட்டம்) வசந்தி, உதவி செயற்பொறியாளர் […]

கோவில்பட்டி

தற்காப்பு கலை போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு நகரசபை தலைவர் பாராட்டு

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மையத்தில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டியும், புனித மரியன்னை பள்ளியில் சிலம்பம், குத்துசண்டை போட்டிகள் பல்வேறு பிரிவுகளில் வயது வாரியாக நடைபெற்றது.. இதில் இலுப்பையூரணி ஏஞ்சல் நர்சரி பள்ளி மாறும் அஸ்வா தற்காப்பு பயிற்சி பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர், இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதியை சந்தித்தனர். அவர்களை பாராட்டிய நகராட்சி தலைவர் மேலும் பல பரிசுகள் பெற வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர் […]

கோவில்பட்டி

திட்டங்குளம், ஆலம்பட்டியில் அடிப்படை வசதி கோரி பா.ஜனதா ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு பா..ஜனதா பட்டியல் அணி  மாவட்ட தலைவர் அய்யாதுரை தலைமையில் திட்டங்குளம் மற்றும் ஆலம்பட்டி கிராமங்களில் பட்டியலின மக்களுக்கு அடிப்படை வசதி செய்து தரக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் திட்டங்குளம் பஸ் நிறுத்தத்தில் நிற்காத  அரசு பஸ்கள் நின்று செல்ல கோரியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில்    பட்டியல் அணி மாவட்ட தலைவர் அய்யாதுரை பாண்டியன் தலைமையில், ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் அம்மன் மாரிமுத்து. கிழக்கு ஒன்றிய தலைவர் மாடசாமி. கிழக்கு ஒன்றிய […]

செய்திகள்

குற்றாலத்தில் சிலிண்டர்கள் வெடித்து பயங்கர தீவிபத்து ; 30 கடைகள் நாசம்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரை சீசன் காலங்களில் குற்றாலநாதர் கோவிலைச் சுற்றி தற்காலிக கடைகள் அமைப்பதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் ஏலம் விடுவது வழக்கம்.அந்த வகையில் ஏலம் எடுத்தவர்கள் குற்றாலநாதர் தெற்கு பிரகாரம், வடக்கு மற்றும் கீழ்பிரகாரம் பகுதியில் தற்காலிக கடைகள் அமைத்துள்ளனர். விதிமுறைகள் மீறி கோவிலைச் சுற்றி இடைவெளி இன்றி கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த ஆண்டு சீசன் தாமதமாக ஜூலை மாதம் தொடங்கி முதல் வாரத்திலேயே முடிந்து விட்டது.தற்போது குற்றாலம் […]

செய்திகள்

ஐகோர்ட்டு தீர்ப்பு: அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டம்

அ.தி.மு.க. பொதுக்குழுவில் கட்சியின் பொதுசெயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதும், ஒ.பன்னீர்செல்வம் உள்பட 4 பேர் நீக்கப்பட்டதும் செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பளித்தது. இந்த ஐந்தே தீர்ப்பை வரவேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி/.ஜெயக்குமார் உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் , கட்சி அலுவலகத்தில்  உள்ள எம்.ஜி.ஆர். , ஜெயலலிதா ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து […]

தூத்துக்குடி

காவல்துறையில் கழிவு செய்யப்பட்ட 16 வாகனங்கள் 31ம் தேதி பொது ஏலம்

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கூறி இருப்பதாவது:-  தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 9 இருசக்கர வாகனங்கள் மற்றும் 7 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 16 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகின்ற 31.8.2023 வியாழக்கிழமை காலை 10.மணிக்கு தூத்துக்குடி கோரம்பள்ளம் மாவட்ட காவல் அலுவலகம் முன்பு உள்ள மைதானத்தில் பொது ஏலம்  நடைபெற உள்ளது.  மேற்படி ஏலம் விடப்பட உள்ள வாகனங்களை […]