திட்டங்குளம், ஆலம்பட்டியில் அடிப்படை வசதி கோரி பா.ஜனதா ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு பா..ஜனதா பட்டியல் அணி மாவட்ட தலைவர் அய்யாதுரை தலைமையில் திட்டங்குளம் மற்றும் ஆலம்பட்டி கிராமங்களில் பட்டியலின மக்களுக்கு அடிப்படை வசதி செய்து தரக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் திட்டங்குளம் பஸ் நிறுத்தத்தில் நிற்காத அரசு பஸ்கள் நின்று செல்ல கோரியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பட்டியல் அணி மாவட்ட தலைவர் அய்யாதுரை பாண்டியன் தலைமையில், ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் அம்மன் மாரிமுத்து. கிழக்கு ஒன்றிய தலைவர் மாடசாமி. கிழக்கு ஒன்றிய பொதுச் செயலாளர் சந்தானம். பிரச்சார பிரிவு மாவட்ட செயலாளர் மாரிமுத்து ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
