• May 9, 2024

Month: August 2023

கோவில்பட்டி

விஜயகாந்த் பிறந்தநாள் : கீழஈரால் சிடார் பள்ளிக்கு டிஜிட்டல் ரைட்டிங் ஒயிட் போர்டு

தே. மு. தி. க. தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு ஒன்றியம் கீழஈரால் சிடார் பள்ளிக்கு டிஜிட்டல் ரைட்டிங் ஒயிட் போர்டு வழங்கப்பட்டது.தே. மு. தி. க.மாவட்டசெயலாளர் சுரேஷ் தலைமையில் ஒன்றியசெயலாளர் பொன்ராஜ் முன்னிலையில் வழங்கப்பட்டது. செயற்குழுஉறுப்பினர் பிரபாகரன், ஒன்றிய அவைதலைவர் சுரேஷ் மகேஷ், தொண்டரணி முத்துக்குமார், கோவில்பட்டி நகரசெயலாளர் நேதாஜி பாலமுருகன், புலிவாடுநாயக்கர் பட்டி கிளைகழக செயலாளர் வீரசின்னு மற்றும் பலர் கலந்துகொண்டனர் சிடார் நிறுவன ஒருங்கிணைப்பாளர் மைக்கேல் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் சிறந்த அங்கன்வாடி பணியாளர்களுக்கு பாராட்டு

தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வி அளித்தலில்சிறந்த அங்கன்வாடி பணியாளர்களுக்கு கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில் சான்றிதழ் மற்றும் பரிசுகள் ஜே.சி.ஐ. சார்பில் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தாஜூன்னிசா பேகம் தலைமை தாங்கினார். அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் முத்து முருகன் முன்னிலை வகித்தார். ஜே.சி.ஐ.செயலாளர் சூர்யா […]

கோவில்பட்டி

சோமவாரம் பிரதோஷம் சிறப்பு பூஜை

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவிலில் இன்று மாலை சோமவாரம் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனை நடைபெற்றது.அதை தொடர்ந்து சிவலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனையும், நந்தியம் பெருமானையும் தரிசனம் செய்தனர்

செய்திகள்

38 மாவட்டங்களில்நடை பயிற்சிக்கான நடைபாதை திட்டம்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

நாகர்கோவிலில்  ஹெல்த் வாக் திட்டத்தின் கீழ் 8 கிலோ மீட்டர் தூரம் நடை பயிற்சி மேற்கொள்வதற்கான நடைபாதையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பால்வளத் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், நாகர்கோவில் மாநகர மேயர் ரெ.மகேஷ் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர். தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் விரைவில் தொடங்கப்பட உள்ள Health Walk திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி சூரிய அஸ்தமன) பகுதியில் 8 கிலோ மீட்டர் தூரம் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி பேருந்து நிலையங்கள் இடையே சர்க்குலர் பஸ் போக்குவரத்து ; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு

கோவில்பட்டி புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் இடையே  சர்க்குலர் பஸ் போக்குவரத்து தொடங்க வேண்டும் என்று   அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவில்பட்டி நகர குழு சார்பில் மனு அளிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் சீனிவாசன், மாவட்ட குழு உறுப்பினர் ஜோதிபாசு, நகரக்குழு உறுப்பினர் தினேஷ், கிளைச் செயலாளர்கள் மற்றும் சிஐடியு தொழிற்சங்கத்தினர் சென்று இருந்தனர். அவர்கள் அளித்த  மனுவில் கூறப்பட்டு […]

தூத்துக்குடி

தருவைக்குளம் – வெள்ளபட்டி சாலையில் ரூ.7 கோடி செலவில் உயர்மட்ட பாலம்; அடிக்கல்

ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தருவைக்குளம் – வெள்ளபட்டி சாலையில் உள்ள தரை மட்ட பாலமனாது, மழைக்காலங்களில் பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்து வருகிறது. மழைகாலங்களில் இந்த தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் ஓடும். இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதனால்  தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்றி தர வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா விடம் கோரிக்கை வைத்திருந்தனர். இதனை ஏற்று சட்டமன்ற உறுப்பினரின்  தீவிர நடவடிக்கையின் காரணமாக தற்போது ரூ, 7 கோடியே […]

கோவில்பட்டி

கோவில்பட்டி பத்திரகாளி அம்மன் கோவில் வருடாபிஷேக விழா; 3-ந்தேதி நடக்கிறது

கோவில்பட்டி நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளி அம்மன் கோவில் வருடாபிஷேக விழா வருகிற 3-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது. அன்றைய தினம்  காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் கும்ப லக்கனத்தில் வருடாபிஷேகம் நடக்கிறது. முன்னதாக காலை 6 மணிக்கு அனுக்சை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், ஸ்ரீ மகா கணபதி ஹோமம், ஸ்ரீ சக்தி ஹோமம், பரிவாரமூர்த்திகளுக்கு மூல மந்திர ஹோமம். அஸ்திர ஹோமம், திரவ்யாகுதி, பூரணாகுதி, தீபாராதனை நடக்கிறது. காலை 9 மணிக்கு மேல் […]

கோவில்பட்டி

மகள்களுடன் சேர்ந்து கணவரை கொன்ற பெண்; பரபரப்பு தகவல்கள்

கோவில்பட்டி அருகே  கயத்தாறு அடுத்த  தலையால் நடந்தான்குளம் கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் காளிமுத்து. ஓய்வு பெற்ற போலீஸ்காரர். இவரது மகன் செல்வக்குமார் (வயது 43) கட்டிடதொழிலாளி. இவரது மனைவி பாக்கிய லட்சுமி. இவர்களுக்கு சுதர்ஷினி(23), கார்த்திகா (19) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று வீட்டின் மாடியில் செல்வக்குமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து செல்வக்குமார் உடலை, அவரது குடும்பத்தினர் அடக்கம் செய்ய முயன்றனர். ஆனால் அவரது உடலில் காயங்கள் இருந்ததால் அக்கம் […]

கோவில்பட்டி

50-க்கு மேற்பட்ட குங்பூ மாணவர்களுக்கு கருப்பு பட்டை

கோவில்பட்டியில் செல்ப் டிபன்ஸ் அகாடமி ஸ்கூல் ஆப் மார்சியல் ஆர்ட்ஸ் சார்பில் 3 ஆண்டுகள் பட்டைய படிப்பு படித்த குங்பூ மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இதில் கருப்பு பட்டை (பிளாக் பெல்ட்) மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழச்சி நடைபெற்றது. கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு 50-க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கருப்பு பட்டை மற்றும் சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சிக்கு மாஸ்டர் ஆனந்தராஜ் தலைமை தாங்கினார். மாஸ்டர் செல்வக்குமார் முன்னிலை வகித்தார்.

கோவில்பட்டி

கோவில்பட்டியில் மாவட்ட சிலம்பம் போட்டி

தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்கம், தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டிகள் கோவில்பட்டியில் எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.  இப்போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மினி சப் ஜூனியர், சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் போட்டி நடைபெற்றது. எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி செயலாளர் கண்ணன், கல்லூரி முதல்வர் செல்வராஜ், டி.சி.எஸ்.ஜே. ஜூனியர் கிளப் தலைவர் வெற்றி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்க சட்ட […]