தூத்துக்குடி மாவட்டத்தில் 2023 ம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றது இதில் தடகளம், கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, கபடி, ஆக்கி, நீச்சல் உள்ளிட்ட பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற்றன பள்ளி, கல்லூரி மாணவ மாணவிக்கான ,மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள், அரசு ஊழியர்கள் என ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுத்தொகைகள் அனைத்தும் அவரவர் வங்கிக் கணக்குக்கு […]
கோவில்பட்டி கோட்ட கலால்துறை சார்பில் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு சிலம்பாட்ட போட்டி வ. உ. சி. அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு கோட்ட கலால்அலுவலர் பா. செல்ல பாண்டியன் தலைமை தாங்கி, சிலம்பாட்ட போட்டியை தொடங்கி வைத்தார். போட்டியில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன, போட்டிக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார், உதவி தலைமை ஆசிரியர் சுதாகரன், […]
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சித்ரா பவுர்ணமி விழா நடந்தது. இதில் 2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது. இந்த சம்பவம் தொடர்பாக செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் காசிராஜன், ராமகிருஷ்ணன், பிரேம்குமார், குணசேகரன் மற்றும் போலீசார் கருங்குளம் அருகே உள்ள தாதன்குளம் ெரயில்வே கேட் பகுதியில் வாகன சோதனையில் […]
கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழகம் சார்பில் நிறுவன தலைவர் அன்புராஜ் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழக பொது செயலாளர் செல்லப்பா, மாவட்ட செயலாளர் பேச்சிமுத்து, மாநில துணை பொது செயலாளர் பொன்னுச்சாமி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பால்துரை, மாநில கொள்கை பரப்பு செயலாளர் முனியசாமி, ஒன்றிய செயலாளர்கள் நெப்போலியன், பொன் மாடசாமி, தென் மண்டல மகளிர் அணி செயலாளர் சுப்புலட்சுமி, மாவட்ட மகளிர் […]
கோவில்பட்டி மந்திதோப்பு நரிக்குறவர் காலனியில் வசிக்கும் நரிக்குறவர் சமுதாயத்தினர் கோவில்பட்டி தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். தாங்கள் வசிக்கும் இடத்தில் ஈயம் பூசும் தொழிலாளர்கள் வந்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் முடிவில் தாசில்தாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறி இருந்ததாவது:- எங்கள் சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்ட சர்வே நம்பர் 109 இல் ஒதுக்கப்பட்ட இடத்தில் வீடுகள், குடிசைகள் அமைத்து வசித்து வருகிறோம்.இந்த நிலையில் ஈயம் பூசும் தொழிலாளர்கள் […]
சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, இன்று (26/06/2023) திங்கட்கிழமை, தூத்துக்குடியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது. தூத்துக்குடி வட்டார போக்குவரத்து துறை மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட மோட்டார் சைக்கிள் பேரணியை தி.மு.க. நாடாளுமன்றக்குழு துணைத் தலைவர் கனிமொழி எம்.பி. பச்சை கோடியை அசைத்து தொடங்கி வைத்தார். அமைச்சர் .அனிதா ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் .ஊர்வசி அமிர்தராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட […]
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு பணி மேற்கொண்டார். அவருடன் அந்த பகுதி அதிகாரிகள் மற்றும் சாத்தான்குளம் தொகுதி எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் சென்று இருந்தனர். ஸ்ரீவைகுண்டம் வட்டம் பொன்னன்குறிச்சி கிராமத்தில் தாமரபரணி ஆற்றில் இருந்து சாத்தான்குளம், உடன்குடி பேரூராட்சிகள் மற்றும் 308 கிராம குடியிருப்பு பகுதிகளுக்கு 9 உறை கிணறுகள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த உரை கிணறுகளை கலெக்டர் செந்தில்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்ய சென்றார். அப்பகுதிக்கு கார் […]
கோவில்பட்டி அருகே தெற்கு செமப்புதூர் கிராமத்தில் அமைந்துள்ள இல்லங்குடி அய்யனார் ,பலவேசக்கார் திருக்கோயில் மற்றும் கோவில்பட்டி அருகே கொடுக்காம்பாறை கிராமத்தில் அமைந்துள்ள தேவி காளியம்மன் திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி திருக்கோயில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, சண்முக ஜபம் மற்றும் சிறப்பு பூஜைகளும், கணபதி ஹோமம், தன பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை, யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. மேளதாளங்கள் முழங்க யாகசாலையில் இருந்து தீர்த்த […]
உலகத்திருக்குறள் கூட்டமைப்பின் கோவில்பட்டி திருக்குறள் மாவட்டம் சார்பாக, “கரண ஆசான் பயிற்சி” வகுப்பு தொடக்கவிழா மைக்ரோபாய்ண்ட் கணினி மையத்தில் நடைபெற்றது. ரோட்டரி மாவட்டத்தலைவர் விநாயகா ரமேஷ் தலைமை தாங்கினார், ஒய்.எம்.சி.ஏ. கோவில்பட்டி தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் முன்னிலை வகித்தார், உலகத்திருக்குறள் கூட்டமைப்பின் தூத்துக்குடி மாவட்டச்செயலாளர் க.தமிழரசன் வரவேற்று பேசினார். உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் மாநிலத்துணைத் தலைவர் பேராசிரியர் கருத்தப்பாண்டி `கரண ஆசான்’ பயிற்சி குறித்து நோக்கவுரை ஆற்றினார், உலகத்திருக்குறள் கூட்டமைப்பின் மண்டலத்தலைவர் ப.முத்துச்செல்வம், இந்தியக் கலாச்சார நட்புறவுக் கழகத்தின் […]
சென்னை அடுத்த புழலில் அதிமுக சார்பில் நடந்த பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி :- பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தில் ஸ்டாலின் கலந்துகொண்டது குறித்து… பதில் :- கோ பேக் ஸ்டாலின் பாட்னாவில் டிரெண்ட் ஆனது. உள்ளூரில் ஓணான் பிடிக்காதவர் வெளியூரில் புலியை பிடிப்பதாக கூறி புலிக்கு பயந்தவர்கள் தம் மீது […]