குடிசை இடங்கள் ஆக்கிரமிப்பு: நரிக்குறவர் சமுதாயத்தினர் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி மந்திதோப்பு நரிக்குறவர் காலனியில் வசிக்கும் நரிக்குறவர் சமுதாயத்தினர் கோவில்பட்டி தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். தாங்கள் வசிக்கும் இடத்தில் ஈயம் பூசும் தொழிலாளர்கள் வந்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம் முடிவில் தாசில்தாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறி இருந்ததாவது:-
எங்கள் சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்ட சர்வே நம்பர் 109 இல் ஒதுக்கப்பட்ட இடத்தில் வீடுகள், குடிசைகள் அமைத்து வசித்து வருகிறோம்.இந்த நிலையில் ஈயம் பூசும் தொழிலாளர்கள் எங்கள் இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து சர்வே கற்களை பிடுங்கி எரிந்து விட்டு பிரச்சினை செய்கின்றனர்,
மேலும் எங்களுக்கு ஒதுக்கபட்ட பொது இடத்தையும் ஆக்கிரமிப்பு செய்து கொண்டுள்ளனர்,ஏற்கனவே 2012-இல் இது போல் பிரச்சினை செய்தவர்கள் மீண்டும் இப்போது ஆக்கிரமிப்பு செய்து எங்களை மிரட்டிக்கொண்டு இருக்கிறார்கள். எனவே தாசில்தார் அவர்கள் இந்த பிரசினையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.எங்களது இடத்தில் ஆக்கிரமிப்பலர்களை அகற்ற வேண்டும்.’
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது,