கோவில்பட்டி பிரதான சாலையோரம் உள்ள நீர்வரத்து ஓடையின் மீது செண்பகவல்லி அம்மன் கோவில் நிர்வாகம் கடைகளைக் கட்டி வாடகைக்கு விட்டிருந்தது. நீர்நிலைகள் மீது பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவிட்டது.இதையடுத்து கோவில்பட்டியில் நீர்வரத்து ஓடையின் மீது கட்டப்பட்டிருந்த கடைகள் கடந்த 2020-ம் ஆண்டு இறுதியில் இடித்து அகற்றப்பட்டன. இந்நிலையில் நீர்வரத்து ஓடையின் மறுபுறம் ஒரு சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட பழமையான ஸ்ரீ மகேஸ்வரர் சமேத மாலையம்மன் திருக்கோவில் உள்ளது.இந்தக் கோவில் […]
சென்னை உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது,. கட்சியின் இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தின் இறுதியில் அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி தமிழகத்தில் நிலவுகின்ற அரசியல் சூழ்நிலைகள்,அரசியல் சூழ்நிலைகள் என்று சொல்லும்போது குறிப்பாக இந்த 20 மாத காலத்தில் திமுக ஆட்சிக்கு வந்து ஒரு விடியல் அவர்களுடைய குடும்பத்திற்கு ஏற்பட்டதே […]
கோவில்பட்டி நீர்வரத்து ஓடையில் ஆக்கிரமிப்பு பாலத்தை அகற்றக்கோரி மீட்பு குழுவினர் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி நீர்வரத்து ஓடை மீட்பு குழு செயலாளர் தமிழரசன் தலைமையில் இன்று காலை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் ஓடை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றக்கோரி கோஷம் எழுப்பினார்கள்,. பின்னர் அவர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு அளித்தனர், அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:- கோவில்பட்டி பிரதானசாலை அருகில் அமைந்துள்ள நீர்வரத்து ஓடையில் செண்பகவல்லி அம்மன் கோவில் சார்பாக கடைகள் கட்ட அனுமதிக்கப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. இதனால் மழைக்காலங்களில் பெருகிவரும் […]
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பிரச்சினை ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி தனி அணியாகவும் ஓ.பி.எஸ். தனி அணியாகவும் செயல்படுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழுவை கூட்டி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தனர். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கு நிறுவையில் உள்ளது. இந்த நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி. எம்.எல்.ஏ.க்கள், செய்தி தொடர்பாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று […]
தமிழ் மாதங்களில் பல மகத்துவங்களை தன்னகத்தே கொண்ட மார்கழி கடவுள் வழிபாட்டுக்கான மாதமாக கருதப்படுகிறது.. பல ஆன்மீக சிறப்பம்சங்களக் கொண்டுள்ளது. வைணவ வழிபாடு மட்டுமல்லாமல், இந்த மாதத்தில் சைவ வழிபாடும் சிறப்பாக செய்யப்படுகிறது.மார்கழி என்றாலே நம் அனைவருக்கும் தோன்றுவது திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி ஆகியவைதான். இந்த மாதம் முழுவதும் இறைவனையும், இயற்கையையும் வணங்கும் மாதமாக கூறப்படுகிறது. தேவர்களுக்கு உகந்த மாதமாக கருதப்படுவது மார்கழி மாதம். இந்த மாதத்தில் ஆலயம் சென்று வழிபட்டால் அனைத்து சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். […]
கோவில்பட்டி ரெயில்வே நிலையம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வைத்த கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய ரெயில்வே துறை மந்திரி பதில் அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் 2வது பெரிய நகரம் கோவில்பட்டி.. தீப்பெட்டி, விவசாயம், நூற்பாலை , கடலை மிட்டாய் , ஆயத்த ஆடை தயாரிப்பு என பல்வேறு தொழில் அம்சங்களைக் கொண்ட நகரம், நாள்தோறும் தொழில் சம்பந்தமாக பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலரும் […]
புரட்சி கவிஞர் பாரதியாரின் மகள் வழி பேத்தி லலிதா பாரதி வயது முதிர்வு காரணமாக இன்று காலை 9 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 94. பாரதியாரின் மூத்தமகள் தங்கம்மாவின் மகளான லலிதா பாரதி, உடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இசையை முறையாகக் கற்றுக்கொண்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாக இசை ஆசிரியராக பணியாற்றி பல மாணவர்களை உருவாக்கியவர் லலிதா பாரதி. பெண்ணியம் சார்ந்த செயல்பாடுகளிலும் ஈடுபட்டிருந்தார். பாரதியார் பாடல்களை இசை மற்றும் நூல் வடிவில் பரப்புவதிலும் […]
“தி.மு.க.அரசின் பொங்கல் பரிசு-யானைப்பசிக்கு சோளப்பொறி” ; சுனாமி நினைவுதினத்தில் அஞ்சலி செலுத்திய டி.ஜெயக்குமார்
18-ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னை காசிமேடு பகுதியில் சுனாமியால் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் அ.தி.மு.க. சார்பில் மெழுகுவர்த்தி ஏற்றியும்,மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார். பின்னர் படகின் மூலம் நடுக்கடலுக்குச் சென்று இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கடலில் பால் ஊற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் இதனைத் தொடர்ந்து கரைக்கு திரும்பிய டி.ஜெயக்குமார், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.வருமாறு:- 2004 ம் ஆண்டு சுனாமியின் தாக்குதல் மிககொடுரமாக இருந்து ஆசிய நாடுகள்,தமிழ்நாடு,கேரளா.ஆந்திரா,மகாராஷ்டிரா […]
கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்தின் 2022-2025 நிர்வாககுழு தேர்தல் 25-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது, இதை தொடர்ந்து இந்த தேர்தலில் ஏற்கனவே தலைவராக இருக்கும் ஏ.பி.கே.பழனிச்செல்வம் தலைமையில் 65 பேர் நிர்வாக குழுவில் போட்டியிட்டனர். இவர்களுக்கு யானை சின்னம் ஒதுக்கப்பட்டது. இவர்களை எதிர்த்து டி.கே.டி.திலகரத்தினம்,எம்.டி.எம்.தங்கராஜ் தலைமையிலான அணியினர் களம் இறங்கினர். 65 பேர் நிர்வாக குழுவுக்கு 21 பேர் மட்டும் போட்டியிட்டனர்,. இவர்களுக்கு […]
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் நண்பர்கள் சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கோவில்பட்டி புதுரோடு முத்தையாமல் தெருவில் நடைபெற்றது.இந்திய, உலக அமைதிக்காக ஆயிரம் ஸ்தோத்திர பலி எழுதிய மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது, பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது,நிகழ்ச்சிக்கு தேமுதிக மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார்,கோவில்பட்டி மேற்கு ஒன்றியசெயலாளர் பெருமாள்சாமி, கிழக்கு ஒன்றியசெயலாளர் பொன்ராஜ் ,மாவட்ட தொண்டரணி முத்துக்குமார் மற்றும் தனபால், அரசுராஜ், சேகர், நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர், நிகழ்ச்சி ஏற்பாடுகளை நேதாஜி நற்பணி […]