கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க தேர்தல் அமைதியாக நடந்தது ; முடிவுகள் விவரம் ஜனவரி 23-ந் தேதி ஐகோர்ட்டு வெளியிடும்

கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்தின் 2022-2025 நிர்வாககுழு தேர்தல் 25-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது,
இதை தொடர்ந்து இந்த தேர்தலில் ஏற்கனவே தலைவராக இருக்கும் ஏ.பி.கே.பழனிச்செல்வம் தலைமையில் 65 பேர் நிர்வாக குழுவில் போட்டியிட்டனர். இவர்களுக்கு யானை சின்னம் ஒதுக்கப்பட்டது.
இவர்களை எதிர்த்து டி.கே.டி.திலகரத்தினம்,எம்.டி.எம்.தங்கராஜ் தலைமையிலான அணியினர் களம் இறங்கினர். 65 பேர் நிர்வாக குழுவுக்கு 21 பேர் மட்டும் போட்டியிட்டனர்,. இவர்களுக்கு மீன் சின்னம் ஒதுக்கப்பட்டது.
இரு அணியினரும் ஒவ்வொரு உறுப்பினரையும் நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தனர், இதனை தொடர்ந்து குறிப்பிட்டபடி 25-ந்தேதி நேற்று தேர்தல் நடைபெற்றது,
இதற்கான வாக்குபதிவு பாண்டவர்மங்கலம் காமராஜர் இண்டர்நேஷனல் அகாடமியில் நடைபெற்றது.காலை 9 மணிக்கு வாக்குபதிவு தொடங்கி மாலை 4.15 மணி வரை நடைபெற்றது.
தேர்தல் நடைபெற்ற பள்ளியில் யானை சின்னத்தில் போட்டியிட்ட ஏ.பி.கே.பழனிச்செல்வம் அணியில் எம்,.செல்வராஜ், எஸ்.ஆர்.ஜெயபாலன், டி.ஆர்.சுரேஷ்குமார் , ஆர்.எஸ்.ரமேஷ் வக்கீல்கள் ஏ.செல்வம், ரத்தினராஜா மற்றும் எல்.ரத்தினகுமார் (டி.வி.எல்.எஸ்.)ஜி.ராமகிருஷ்ணன், சரவணக்குமார் எதிர் அணியில் டி. கே.டி.திலகரத்தினம்,எம்.டி.எம்.தங்கராஜ், ஜெ..தயாளமோகன், சுதாகரன், முருகராஜ், வேதமணி உள்ளிட்டவர்கள் கூடி இருந்தனர், அவர்கள் ஓட்டுபோட வந்த உறுபினர்களை வரவேற்று ஓட்டுபோட அனுப்பி வைத்தனர்,.
இந்த தேர்தலில் மொத்த வாக்காளர்கள் 2500 பேர் இதில் நேற்று 1676 பேர் வாக்களித்தனர். வாக்குப்பதிவு நடந்த பள்ளியில் ஒரு அறையில் நடுப்பகுதியில் வாக்குபெட்டி வைக்கப்பட்டு இருந்தது,. சுற்றிலும் எட்டு இடங்களில் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய மறைவிடம் அமைக்கப்பட்டு இருந்தது.
நீண்ட வரிசையில் நின்ற வாக்களார்கள் வாக்குச்சாவடிக்குள் சென்றதும் வாக்காளார்கள் விவரம் சரிபார்க்கப்பட்டு வாக்குசீட்டு வழங்கப்பட்டது,.
அந்த வாக்கு சீட்டில் ஒரு பகுதியில் ஏ.பி.கே..பழனிச்செல்வம் தலைமையிலான 65 பேர் பெயர்கள் அவர்களுக்கான யானை சின்னம் காணப்பட்டது, மறுபுறத்தில் எதிரணியில் போட்டியிடும் 21 பேர்களின் பெயர்களும் மீன் சின்னமும் இருந்தது.
வாக்காளர்கள் ஒவ்வொருவரும் மறைவிடம் சென்று தங்கள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் வகையில் வாக்குபதிவு செய்து வாக்குசீட்டை வாக்குபெட்டியில் போட்டனர்.

தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள வி.நாகராஜன் தலைமையில் தேர்தல் நடைபெற்றது. எந்த வித அசம்பாவிதமும் இல்லாமல் தேர்தல் அமைதியாக நடந்தது முடிந்தது.
பின்னர் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தொடர்ந்து இரவிலும் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று இன்று காலையிலும் நடைபெற்று வருகிறது,.
இன்று பிற்பகலுக்குள் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பிறகு வாக்கு பெட்டி மதுரை ஐகோர்ட்டுக்கு கொண்டு செல்லப்படும். தேர்தல் முடிவு விவரம் உடனடியாக வெளியாகாது. ஜனவரி 23-ந்தேதி அன்று ஐகோர்ட்டு மூலம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.
