கோவில்பட்டியில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் நண்பர்கள் சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கோவில்பட்டி புதுரோடு முத்தையாமல் தெருவில் நடைபெற்றது.
இந்திய, உலக அமைதிக்காக ஆயிரம் ஸ்தோத்திர பலி எழுதிய மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது, பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது,
நிகழ்ச்சிக்கு தேமுதிக மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார்,
கோவில்பட்டி மேற்கு ஒன்றியசெயலாளர் பெருமாள்சாமி, கிழக்கு ஒன்றியசெயலாளர் பொன்ராஜ் ,மாவட்ட தொண்டரணி முத்துக்குமார் மற்றும் தனபால், அரசுராஜ், சேகர், நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர், நிகழ்ச்சி ஏற்பாடுகளை நேதாஜி நற்பணி இயக்க தலைவர் பாலமுருகன் செய்திருந்தார்

