• May 20, 2024

“தி.மு.க.அரசின் பொங்கல் பரிசு-யானைப்பசிக்கு சோளப்பொறி” ; சுனாமி நினைவுதினத்தில் அஞ்சலி செலுத்திய டி.ஜெயக்குமார் பேட்டி

 “தி.மு.க.அரசின்  பொங்கல் பரிசு-யானைப்பசிக்கு சோளப்பொறி” ; சுனாமி நினைவுதினத்தில் அஞ்சலி செலுத்திய டி.ஜெயக்குமார் பேட்டி

18-ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னை காசிமேடு பகுதியில் சுனாமியால் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் அ.தி.மு.க. சார்பில் மெழுகுவர்த்தி ஏற்றியும்,மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் படகின் மூலம் நடுக்கடலுக்குச் சென்று இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கடலில் பால் ஊற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்

இதனைத் தொடர்ந்து கரைக்கு திரும்பிய டி.ஜெயக்குமார், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.வருமாறு:-

2004 ம் ஆண்டு சுனாமியின் தாக்குதல் மிககொடுரமாக இருந்து ஆசிய நாடுகள்,தமிழ்நாடு,கேரளா.ஆந்திரா,மகாராஷ்டிரா  போன்ற கடற்கரை பகுதிகளும்,,அதேபோல இலங்கை,இந்தோனேஷிய போன்ற நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

அம்மா முதலமைச்சராக இருந்த காலத்தில்  போர்க்கால நடவடிக்கை எடுத்து,மீட்பு நடவடிக்கை எடுத்து,மறு வாழ்வு நடவடிக்கை நிவாரண நடவடிக்கை என அனைத்தும் முடுக்கிவிடப்பட்டு,உலக நாடுகளே வியக்கும் வகையில் சிறப்பான முறையில் செயல்பட்ட காரணத்தினால் மற்ற நாடுகள்கூட புரட்சித்தலைவி அம்மாவின்  ஆலோசனை பெறவேண்டும் என்பதற்காக அதிகாரிகளை எங்கள் நாட்டுக்கு அனுப்பவேண்டும் என்று சொல்லி இங்கிருந்து பல நாடுகளுக்கு அதிகாரிகள்  சென்று பணியாற்றினார்கள்

அம்மாவின் ஆட்சிக் காலத்தில். அந்த அளவுக்குச் சுனாமியாக இருந்தாலும் சரி,இயற்கை இடர்பாடுகளாக இருந்தாலும் சரி,புயலாக,மழையாக,வறட்சியாக இருந்தாலும் சரி அதனை வெற்றிகரமாக எதிர்கொண்டு மக்களுக்கு தேவையான நடவடிக்கை எடுத்த ஒரே தலைவி அம்மாவும்,கழக அரசுதான். எடப்பாடியார் காலத்தில்கூட ஒக்கி புயல்,கெஜா புயல் ஆகியவற்றைத் திறமையாக எதிர்கொண்டு மக்களுக்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த விடியா அரசு இயற்கை இடர்பாடு என்றாலே மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் செய்வதில்லை. திமுக அரசு ஆட்சிக்கு வந்ததிற்கு முன்னர் பின்னோக்கி பார்த்தால் எந்த புயலுக்கு எந்த நிவாரணமும் அளித்தது கிடையாது. தற்போது மாண்டஸ் புயல் வந்து கிட்டவிட்ட 15 நாட்களுக்கு மேல் ஆகிறது. இதே இடத்தில் முதலமைச்சர் வந்து பார்த்துவிட்டு உடனடியாக நிவாரணம் வழங்குவேன் என்று சொன்னார். 15 நாட்கள் ஆகிறது.இதுவரை எந்த நிவாரணமும் வழங்கவில்லை.

 இந்த விடியா திமுக அரசு மீனவர்கள் அதிமுகவுக்கு ஒட்டுபோடுவார்கள்,புரட்சித்தலைவர் மீதும்,அம்மா மீது பாசம் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களைப் பழித்து வஞ்சிக்கின்ற செயலைதான் செய்துகொண்டிருக்கின்றது. நமது கட்சியின் சார்பில் தற்போது இந்த நிகழ்வுக்கு வந்த கூட்டத்தைப் பாருங்கள்..திமுகவினர் வெறும் 50 பேர்தான். மக்களைச் சந்திக்கத் தைரியம் இல்லை. மீனவர்களைச் சந்திக்கத் தைரியம்.இல்லை.இதுபோல பேச வேண்டியதுதானே.வந்தார்கள்.பூ போட்டார்கள்.ஒடிவிட்டார்கள்.ஒப்புக்கு வந்துவிட்டுச் சென்றார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும் அதற்கு டி.ஜெயக்குமார் அளித்த பதிலும் வருமாறு.

கேள்வி :  சென்னையில் இருக்கும் அமைச்சர்களே வரவில்லை.

பதில் : அவருக்கு துறை தொடர்பாக எதுவும் தெரியாது. அவர் ஒரு வியாபாரி.வியாபாரியை துறைக்குப் போட்டால் எப்படித் துறையை பார்ப்பார். பணக்கணக்கைதான் பார்பார். மீனவர்களின் மனக்கணக்கை அறிந்து அதன் அடிப்படையில் செயலாற்றவேண்டும் என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லை. புயல் பாதித்த பகுதியில் அவரை பார்த்ததாக இல்லை. நாங்கள் அனைத்து கிராமத்திற்கும் சென்றோம். நான் நேரடியாக 30 கிராமத்திற்குச் சென்று வந்தேன். ஒரு கிராமத்திற்காகவாவது இவர்கள் சென்றிருப்பார்களா.போகவில்லை. செயல்பாடு இல்லாத அரசு.அவர்களுக்கு இதைப்பற்றி கவலையில்லை. மக்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.எது குறித்துப் பேசினாலும் கவலையில்லை என்று இருக்கிறார்கள்.எங்களுக்கு கரப்ஷன், கமிஷன், கலெக்ஷன். அதில்தான் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்களே தவிரச் செயல்பாட்டில் இல்லை.மீன்வளத்துறை அமைச்சராக இருந்தாலும் சரி மற்ற அமைச்சர்களாக இருந்தாலும் மக்கள் நலப்பணிகளைச் செய்வதில்லை.

கேள்வி : அ.தி.மு.க. இணைப்பதற்கான பணிகளை நடைபெற்றுவருவதாக சசிகலா தெரிவித்துள்ளாரே

பதில்  :வடிகட்டின பொய் இது. ஜமுக்காளத்தில் வடி கட்டின பொய்.அதற்கு மேல் என்ன சொல்வது. சசிகலாவுக்கு கட்சிக்கு எந்த சம்பந்தமும் இல்லை. எடப்பாடியார் தலைமையில் கட்சி ஒற்றுமையாகத்தான் போய்க்கொண்டிருக்கின்றது.எனவே அவர்கள் சொல்வது எல்லாம் வடிகட்டின பொய். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யே உருவான உருவம்தான் அது. 

கேள்வி : கடந்த ஆட்சியில் 2,500 வழங்கப்பட்டது,தற்போது சர்க்கரை அட்டைக்கு ஆயிரம் இல்லை என்று தகவல் வருகிறதே.

பதில் : ஆட்சியில் இல்லாதபோது ரூ.5 ஆயிரம் தரவேண்டும் என்றார் ஸ்டாலின்.இப்போதுதான் ஆட்சிக்கு வந்துவீட்டீர்கள் அல்லவா.ரூ. 5 ஆயிரம் தரவேண்டியதுதானே. நாங்கள் அட்டையில் வித்தியாசம் பார்க்கவில்லை.2 கோடி அளவுக்கு அனைவருக்கும் கொடுத்தோம். காவல்துறையினரும் வாங்கினர்..அனைத்து அட்டைக்கும் பாரபட்சம் இல்லாமல் வழங்கினோம். பொங்கல் விழாவை மகிழ்வோடு கொண்டாடவேண்டும் என்பதற்காக 2 கோடி குடும்பத்திற்கு அளித்தோம். கொடுப்பதே ஆயிரம் ரூபாய்.அதில் இந்த அட்டை,அந்த அட்டை என்றால் எப்படி. கரும்பும் இல்லை.அமைச்சர் ஏ,வ.வேலு பேசியதைப் பார்த்தீர்களா.நிர்வாகத்தை நடத்தத் தெரியாமல் ஆளுகிறார்கள் என்றால் அதற்கு அவரின் ஒப்புதல் வாக்குமூலமே போதும். அரசு என்ன தூங்கிக்கொண்டுள்ளதா. பொருட்கள் சரியாக இருந்தால் வாங்கப்போகிறோம். வெல்லம் கொடுத்தால் குறை என்று சொல்கிறீர்கள்.இப்படிகுறையை சொல்லிவருகிறீர்கள் என்று சொல்கிறார். அரசு இயந்திரம் உள்ளது.உரிய நிறுவனத்திற்கு அளித்து, அந்த பொருள் மக்களுக்குச் சென்றால் ஏன் குறை சொல்லப்போகிறார்கள். எங்கள் ஆட்சிக் காலத்தில் உருகிய வெல்லம் அளித்தோமா. பப்பாளி விதை அளித்தோமா. பெரிய கரும்பை அளித்தோம். நிர்வாக அனுபவம் இல்லை என்பதுதான் ஏ.வ.வேலுவின் ஒப்புதல் வாக்கு மூலம்..வெட்கம்.இவ்வளவு பெரிய அரசு இயந்திரத்தை வைத்துக்கொண்டு இப்படிப் பேசுவது அரசின் நிர்வாக கோளாறு என்பதை அவரே ஒத்துக்கொள்கிறார்.

இவர்களை நம்பி கரும்பு விவசாயிகள் கரும்பைப் பயிர் செய்தார்கள்.இப்போது அதனை எங்குக் கொண்டுசெல்வார்கள். அதனை விற்க முடியாமல் இருக்கிறார்கள். அவர்கள் தோழமை கட்சியே அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். எப்படியோ வாய் திறந்துவிட்டார்கள். நிறையப் பிரச்சனைகள் எல்லாம் இருக்கிறது,.அதற்கு எல்லாம் வாய் திறக்கவில்லை.இதற்கு மட்டும்  இரக்கமாகச் சொல்லியுள்ளார்கள். சத்தமாகச் சொல்லவேண்டியதுதானே. கரும்பைக் கொள்முதல் செய்யவேண்டும்.விவசாயிகளை வஞ்சிக்காதீர்கள்.இதனை எடப்பாடியார் தெரிவித்துள்ளார். கரும்பு இல்லாத பொங்கல் உண்டா. எ.வேலுக்குப் பல் இருக்கின்றதா இல்லையா என்று தெரியவில்லை.அதனால் கரும்பை வேண்டாம் என்று சொல்லிவிட்டார். கரும்பை இந்த அரசு கொள்முதல் செய்யாவிட்டால் விவசாயிகளுக்குச் செய்கின்ற மிகப்பெரிய துரோகம் இது.

கேள்வி  : தி.மு.க. அரசின் பொங்கல் பரிசு குறித்து ஒரே வரியில் பதில் சொல்லுங்கள்.

பதில்  : யானை பசிக்கு சோளப்பொறி

கேள்வி : ஒன்றுபட்ட அ.தி.மு.க.வை எப்போது பார்ப்பது

பதில்  :கேள்வியே தவறு.தற்போது எடப்பாடியார் தலைமையில் ஒற்றுமையுடன் அ.தி.மு.க உள்ளது.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதில் அளித்தார.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *