Month: August 2022

கோவில்பட்டி

கோவில்பட்டி மக்களுக்கு நற்செய்தி…!அனைத்து பஸ்களும் கூடுதல் பஸ் நிலையத்துக்குள் சென்று திரும்ப நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் முக்கியமான நகரம் கோவில்பட்டி. தீப்பெட்டி, மில், கடலைமிட்டாய் தயாரிப்பு மற்றும் விவசாயம் என தொழில் சார்ந்த நகரம் என்பதால் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் கோவில்பட்டி நகரை நோக்கி வருகிறார்கள். இதனால் மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது.நகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கும் வகையில் கோவில்பட்டி நகர்பகுதியில் அண்ணா பஸ் நிலையம் செயல்பட்டு வந்தாலும், நகராட்சி சார்பில் தேசிய நெடுஞ்சாலையில் 3.97 ஏக்கர் பரப்பளவில் 1 கோடியே 80 லட்ச ரூபாய் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்; 158 பேர் கைது

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை வாபஸ் வாங்க கோரியும்,அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, உயிர் காக்கும் மருந்து விலை உயர்வை கட்டுப்படுத்த கோரியும் தமிழ்நாடு முழுவதும் இன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்,கோவில்பட்டி பஸ்நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கோஷங்கள் எழுப்பியவாறு தாலுகா செயலாளர் பாபு, நகரச் செயலாளர் சரோஜா, கயத்தாறு ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் மகேந்திர சிங் ஆகியோர் தலைமையில் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சித்தனர்.இதற்கு கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் […]

செய்திகள்

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஓ.பன்னீர்செல்வம்; டி.ஜெயக்குமார் சொல்கிறார்

சென்னை ராயபுரம் தொகுதிக்குட்பட்ட ஸ்ரீ தேன் விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பேட்டியின் போது டி.ஜெயக்குமார் கூறியதாவது:-தமிழகத்தில் தி.மு.க. அரசு சர்வாதிகார போக்குடன் செயல்பட்டு வருகிறது. பதவி ஆசை கொண்ட பன்னீர்செல்வம், வெவ்வேறு துறை அமைச்சர்களிடம் இருந்து அவருக்கு தேவையான துறைகளை பிரித்து எடுத்துக் கொண்டு செயல்பட்டார். அ.தி.மு.க. ஆட்சியில் வேறு எந்த துறையிலும் ஊழல் குற்றச்சாட்டு எழுப்பப்படாமல் இருந்த […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் நாளை முதல் ஒருவழிப்பாதை அமலாகிறது

கோவில்பட்டி நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காண்பது தொடா்பான கலந்தாய்வு கூட்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் டி.எஸ்.பி. வெங்கடேஷ் தலைமையில் நேற்று நடைபெற்றது.வட்டார போக்குவரத்து அலுவலா் நெடுஞ்செழிய பாண்டியன், அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளா் ஜெகநாதன், நெடுஞ்சாலை உதவிப் பொறியாளா் விக்னேஷ், தனியார் பஸ், மினி பஸ் உரிமையாளா்கள் சங்கத்தினா், ஆட்டோ ஓட்டுநா்கள் நலச் சங்கத்தினா் உள்ளிட்டோர் கலந்து கொண்டனா்.நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை தீர்ப்பது பற்றி விவாதிக்கப்பட்டது. இறுதியில் கோவில்பட்டி […]

கோவில்பட்டி

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டியில் அதிகபட்சமாக 55 மி.மீ.மழை

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 144.3 மி.மீ மழை பெய்தது. தலைநகர் தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர், விளாத்திகுளம் பகுதிகளில் நேற்று மழை பெய்யவில்லை. 8 ஊர்களில் மட்டும் மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக கோவில்பட்டியில் 55 மி.மீ.மழை பெய்துள்ளது. இந்த மழை காரணமாக சாலைகளில் அநேக இடங்களில் தண்ணீர் தேங்கியது. அன்னை தெரசா நகர் பகுதியில் தண்ணீர் தேங்கி குளம் போல் காணப்பட்டது.பல மாதங்களாக சீர்கெட்டு கிடந்த புதுரோட்டில் சனிக்கிழமை அன்று ஒரு பகுதியில் தார்ச்சாலை போடப்பட்டது. அதுவும் […]

செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் முக கவசம் அணிவது கட்டாயம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியதில் இருந்து, சென்னை விமான நிலையத்தில் பயணிகள், ஊழியர்கள், விமான நிலையத்துக்கு வருபவர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விதிமுறை அமுல் படுத்தப்பட்டுள்ளது.மத்திய, மாநில அரசுகள் எடுத்த நோய் தடுப்பு நடவடிக்கைகளால், கொரோனா வைரஸ் பாதிப்பு, நாடு முழுவதும் படிப்படியாக குறைந்து வருகிறது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் முகக்கவசம் அணிபவர்கள், சமூக இடைவெளி கடைபிடிப்பது போன்றவைகள், பெருமளவு குறைந்து வருகின்றன.இதையடுத்து […]

கோவில்பட்டி

பூக்கள் விலை உயர்வு: கோவில்பட்டியில் ஒரு கிலோ மல்லிகை ரூ.1,300

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் பூக்கள் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சென்னை கோயம்பேடு சந்தையில் மல்லிகை கிலோ ரூ. 800-க்கும், முல்லை கிலோ ரூ. 500-க்கும், சம்பங்கி கிலோ ரூ. 150-க்கும், ரோஜா கிலோ ரூ. 160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.கோவில்பட்டி பூ மார்க்கெட்டில் இன்று மல்லிகை பூ ஒரு கிலோ […]

கோவில்பட்டி

போலி இயற்கை உரம் விற்பனை செய்யப்படுவதாக, விவசாயிகள் சந்தேகம்; முதல்- அமைச்சருக்கு புகார்

முதல்-அமைச்சர் தனிப்பிரிவிற்கு, கரிசல்பூமி விவசாய சங்கத் தலைவர் வரதராஜன் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-தூத்துக்குடி மாவட்டத்தில் புரட்டாசி ராபி பருவத்திற்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் சில கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளுக்கு உரம் வந்துள்ளது.இதற்கிடையில் கடந்த சில வாரங்களாக கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், புதூர் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் தஞ்சாவூர், அறந்தாங்கி, பட்டுக்கோட்டை பகுதியில் இருந்து சில வியாபாரிகள் முகாமிட்டு, அந்த உரத்திற்கு இணையாக இருப்பதாக கூறி, இயற்கை கடல் பாசி […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம்

கோவில்பட்டி இல்லத்து பிள்ளைமார் திருமண மகாலில் இன்று காலை 9 மணிக்கு இலவச கண் பரிசோதனை முகாம் தொடங்கியது. மதியம் 2 மணி வரை நடக்கிறது.இல்லத்து பிள்ளைமார் இளைஞர் சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைத்து நடத்திய இந்த முகாமில் கண் நோயாளிகளுக்கு கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண் நீர் அழுத்த நோய் பரிசோதனை செய்யப்பட்டது. கண் டாக்டர்கள் ஜெயப்பிரியா, ஸ்ரீதர் ஆகியோர் இந்த சோதனையை நடத்தினார்கள். இம்முகாமில் கண் மருந்து இலவசமாக வழங்கப்பட்டது. கண் கண்ணாடிகள் […]

கோவில்பட்டி

கணவருடன் சென்ற பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறித்த 2 பேர் சிக்கினர்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் துவரந்தை பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி இவர் தனது மனைவி கிருஷ்ணவேணி (24) மற்றும் 3 குழந்தைகளுடன் கடந்த 26.6.2022 அன்று இரவு இருசக்கர வாகனத்தில் புதியம்புத்தூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பினார்.குளத்தூர் – வேம்பார் கடற்கரை சாலை சுப்பிரமணியபுரம் விலக்கு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், கருப்பசாமி ஓட்டி வந்த வாகனத்தை மடக்கி கிருஷ்ணவேணி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க […]