• May 19, 2024

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டியில் அதிகபட்சமாக 55 மி.மீ.மழை

 தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டியில் அதிகபட்சமாக 55 மி.மீ.மழை

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 144.3 மி.மீ மழை பெய்தது. தலைநகர் தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர், விளாத்திகுளம் பகுதிகளில் நேற்று மழை பெய்யவில்லை. 8 ஊர்களில் மட்டும் மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக கோவில்பட்டியில் 55 மி.மீ.மழை பெய்துள்ளது. இந்த மழை காரணமாக சாலைகளில் அநேக இடங்களில் தண்ணீர் தேங்கியது. அன்னை தெரசா நகர் பகுதியில் தண்ணீர் தேங்கி குளம் போல் காணப்பட்டது.
பல மாதங்களாக சீர்கெட்டு கிடந்த புதுரோட்டில் சனிக்கிழமை அன்று ஒரு பகுதியில் தார்ச்சாலை போடப்பட்டது. அதுவும் முழுவதுமாக அமைக்கவில்லை. அதற்குள் தொடர்ந்து மழை காரணமாக சாலை அமைப்பு பணி நடைபெறவில்லை.
நேற்று பெய்த மழையின் போது புதுரோடு இறக்கம் மற்றும் அரசு மருத்துவமனை எதிர்புறம் தண்ணீர் தேங்கியது. பஸ் நிறுத்தம் அருகே அதிக அளவில் தண்ணீர் தேங்கி கிடந்தது.

அன்னை தெரசா நகர் பகுதி


மேலும் இளையரசனேந்தல் சாலையில் ரெயில்வே சுரங்க பாலத்தில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர். பின்னர் போக்குவரத்து சிறிது நேரம் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டது.
முக்கிய ஊர்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:–
கோவில்பட்டி – 55
கயத்தாறு- 24
கடம்பூர்- 15
எட்டயபுரம்- 14.3
சூரங்குடி- 13
கழுகுமலை- 8
ஸ்ரீவைகுண்டம் – 8
மணியாச்சி – 7

.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *