• May 19, 2024

கோவில்பட்டியில் நாளை முதல் ஒருவழிப்பாதை அமலாகிறது

 கோவில்பட்டியில் நாளை முதல் ஒருவழிப்பாதை அமலாகிறது

கோவில்பட்டி நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காண்பது தொடா்பான கலந்தாய்வு கூட்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் டி.எஸ்.பி. வெங்கடேஷ் தலைமையில் நேற்று நடைபெற்றது.
வட்டார போக்குவரத்து அலுவலா் நெடுஞ்செழிய பாண்டியன், அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளா் ஜெகநாதன், நெடுஞ்சாலை உதவிப் பொறியாளா் விக்னேஷ், தனியார் பஸ், மினி பஸ் உரிமையாளா்கள் சங்கத்தினா், ஆட்டோ ஓட்டுநா்கள் நலச் சங்கத்தினா் உள்ளிட்டோர் கலந்து கொண்டனா்.
நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை தீர்ப்பது பற்றி விவாதிக்கப்பட்டது. இறுதியில் கோவில்பட்டி நகரில் ஒருவழிப்பாதை அமல் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நடைமுறைப்படுத்தப்படும் மாற்றங்கள் விவரம் வருமாறு:-

  • தூத்துக்குடி, விளாத்திகுளம், திருச்செந்தூா் ஆகிய ஊா்களிலிருந்து கோவில்பட்டி வரும் பஸ்கள், எட்டயபுரம் சாலை, கதிரேசன் கோவில் சாலை, பார்க் கிழக்கு சாலை வழியாக அண்ணா பஸ் நிலையம் செல்ல வேண்டும்.
    *கடலையூா் சாலையிலிருந்து வரும் மினி பஸ்களை புதுரோடு நகராட்சி பள்ளி முன்பு நிறுத்தக் கூடாது.
    *மதுரை, விருதுநகா் பகுதிகளிலிருந்து கோவில்பட்டி வரும் பஸ்கள், தோட்டிலோவன்பட்டி வழியாக ரெயில் நிலையம், புதுரோடு, எட்டயபுரம் சாலை, கதிரேசன் கோவில் சாலை, பார்க் கிழக்கு சாலை வழியாக அண்ணா பஸ் நிலையம் செல்லலாம்.
    *அண்ணா பஸ் நிலையத்திலிருந்து ராஜபாளையம் செல்லும் பஸ்கள், மினி பஸ்கள் இளையரசனேந்தல் ரோடு ரெயில்வே சுரங்கப்பாதை வழியாக செல்லலாம். அங்கிருந்து வரும் பஸ்கள், மினி பஸ்கள் கூடுதல் பஸ் நிலையம், இனாம்மணியாச்சி, லட்சுமி மில் மேம்பாலம் வழியாக வர வேண்டும்.
    *நாகா்கோவில்- திருநெல்வேலி- மதுரை மார்க்கமாக செல்லும் ஆம்னி உள்பட அனைத்து வகை பஸ்களும் சர்வீஸ் சாலையில் நின்று செல்லாமல் கூடுதல் பஸ் நிலையம் உள்ளே சென்று திரும்ப வேண்டும்.
    அண்ணா பஸ் நிலையத்திலிருந்து புறவழிச்சாலைக்கு செல்லும் வாகனங்கள் மட்டுமே இளையரசனேந்தல் ரோடு சுரங்கப்பாதை வழியாக செல்ல அனுமதிக்கப்படும்;
    புதன்கிழமை (ஆகஸ்ட் 31) முதல் இந்த மாற்றம் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
    வழக்கமாக போக்குவரத்து மாற்றம் என்றால் பத்திரிக்கை செய்தி அனுப்புவது வழக்கம். ஆனால் மிக முக்கிய இந்த அறிவிப்பு பற்றிய விவரங்களை போலீசாரோ, போக்குவரத்து அதிகாரிகளோ விரிவான பத்திரிகை குறிப்பு எதுவும் அனுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *