• May 19, 2024

பூக்கள் விலை உயர்வு: கோவில்பட்டியில் ஒரு கிலோ மல்லிகை ரூ.1,300

 பூக்கள் விலை உயர்வு:  கோவில்பட்டியில் ஒரு கிலோ மல்லிகை  ரூ.1,300

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் பூக்கள் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு சந்தையில் மல்லிகை கிலோ ரூ. 800-க்கும், முல்லை கிலோ ரூ. 500-க்கும், சம்பங்கி கிலோ ரூ. 150-க்கும், ரோஜா கிலோ ரூ. 160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
கோவில்பட்டி பூ மார்க்கெட்டில் இன்று மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.15௦௦ க்கு விற்பனை செய்யப்பட்டது..1௦௦ கிராம் ரூ.15௦ என்று அடாவடி விலையில் வியாபாரிகள் விற்பனை செய்தனர். செவ்வந்தி பூ ஒரு கிலோ ரூ,400 க்கு விற்பனையானது.
இந்த விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். குறைந்த அளவில் பூக்கள் வாங்கி சென்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *