• May 19, 2024

கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்; 158 பேர் கைது

 கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்; 158 பேர் கைது

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை வாபஸ் வாங்க கோரியும்,அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, உயிர் காக்கும் மருந்து விலை உயர்வை கட்டுப்படுத்த கோரியும் தமிழ்நாடு முழுவதும் இன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்,
கோவில்பட்டி பஸ்நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கோஷங்கள் எழுப்பியவாறு தாலுகா செயலாளர் பாபு, நகரச் செயலாளர் சரோஜா, கயத்தாறு ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் மகேந்திர சிங் ஆகியோர் தலைமையில் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சித்தனர்.
இதற்கு கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித்ஆனந்த், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி மற்றும் போலீசார் அனுமதி மறுத்தனர். இதை தொடர்ந்து போலீசாருக்கும், கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கட்சியினர் மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து மறியல் ஈடுபட்ட மாவட்ட குழு உறுப்பினர்கள் சேதுராமலிங்கம், பரமராஜ், ஜோசப், செல்லையா, தாலுகா துணை செயலாளர் ராமகிருஷ்ணன், சுரேஷ், நகர துணை செயலாளர்கள் அலாவுதீன், ஜோசப் உள்பட 158 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் 101 பேர் பெண்கள். கைதான அனைவரும் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *