• May 5, 2024

Month: May 2022

செய்திகள்

மாநிலங்களவை காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரம்; முதல் – அமைச்சரிடம் வாழ்த்து

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான தேர்தலை இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. இதனையடுத்து வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது.தி.மு.க. சார்பில் கிரிராஜன், கல்யாண சுந்தரம், ராஜேஸ்குமார் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டனர்.அ.தி.மு.க. சார்பில் சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 2 பேரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் தேசிய ஜூனியர் ஆக்கி: உத்தரபிரதேச அணி `சாம்பியன்’

கோவில்பட்டி கிருஷ்ணா நகர் செயற்கை புல்வெளி ஆக்கி மைதானத்தில் 12-வது தேசிய ஜூனியர் ஆண்கள் ஆக்கி போட்டி கடந்த 17-ந்தேதி தொடங்கியது. தமிழ்நாடு உள்பட 29 மாநில அணிகள் பங்கேற்றன. பகல் மற்றும் இரவு மின்னொளியில் நடந்த இப்போட்டியில் மொத்தம் 50 போட்டிகள் நடைபெற்றன.8 பிரிவுகளாக பிரிக்கப்பட்ட லீக் போட்டிகளும், பின்னர் காலிறுதி, அரையிறுதி போட்டிகளும் நடைபெற்றன. இறுதிபோட்டிக்கு உத்தரபிரதேசம்-சண்டிகர் அணிகள் தகுதி பெற்றன.இதை தொடர்ந்து 3, 4 இடத்திற்கான போட்டி மற்றும் இறுதிப்போட்டி ஆகியவை நேற்று […]

செய்திகள்

`வாட்ஸ் அப்’ மூலம் ஆர்டர் எடுத்து போதைப்பொருள் விற்பனை; பெண் உள்பட 3

சென்னை அண்ணா நகரில் ஒரு மஹாலில் அனுமதி இல்லாமல் டி.ஜே நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மடிப்பாக்கத்தை சேர்ந்த பிரவீன் என்பவர் அதிக அளவு போதை மருந்து உபயோகித்ததால் உயிரிழந்தார். இது தொடர்பாக மதுவிலக்கு அமலாக்க போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர் மற்றும் ஊழியர்கள் உட்பட 6 பேரை கைது செய்த நிலையில் இந்த வணிக வளாகம் அருகே வாலிபர் ஒருவர் போதை […]

செய்திகள்

கொடைக்கானல் மலர்க்கண்காட்சி: 6 நாட்களில் 56 ,785 பேர் பார்வையிட்டனர்

சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் குளு, குளு சீசனையொட்டி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 24-ந்தேதி பிரையண்ட் பூங்காவில் தொடங்கியது.இந்த கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர்களாலான திருவள்ளுவர் சிலை, மயில் உள்ளிட்ட பல்வேறு உருவங்கள் அமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. முதன்முறையாக 6 நாட்கள் நடைபெற்ற இந்த மலர் கண்காட்சியை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.இதனிடையே நேற்று அதிகாலை முதலே நூற்றுக்கணக்கான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் வந்தனர். இதன் காரணமாக சுமார் 10 […]

செய்திகள்

சிறைக்காவலர் மீது பேராசிரியை புகார்; `திருமணம் செய்து ஏமாற்றி விட்டார்’

கோவையை அடுத்த சூலூரை சேர்ந்த 29 வயது கல்லூரி பேராசிரியை ஒருவர் ரேஸ்கோர்ஸ் போலீசில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:-நான் கோவையில் உள்ள ஒரு பார்மசி கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறேன். எனது தந்தை கோவை மத்திய சிறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அதே சிறையில் காவலராக பணியாற்றிய ரவிக்குமார் (வயது 31) என்பவர் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார்.நாங்கள் கோவையில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்த போது, ரவிக்குமாரும் அதே பகுதியில் குடியிருந்தார். இதனால் எனக்கும், […]

கோவில்பட்டி

தேசிய கேலோ இந்தியா ஆக்கி போட்டி; தமிழக பெண்கள் அணியில் கோவில்பட்டி வீராங்கனை

17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான தேசிய கேலோ இந்தியா ஆக்கி போட்டி. ஜூன் 4-ந் தேதி முதல் அரியானா மாநிலம் பஞ்ச குலா என்ற இடத்தில் நடைபெற உள்ளது.இதில் தமிழ் நாடு அணியின் சார்பாக விளையாட தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த வீராங்கனை. அ. அன்னபாக்கியம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையொட்டி அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கோவில்பட்டி

‘ஒற்றை தலைமை என்ற நிலை அ.தி.மு.க.வில் இல்லை’- கடம்பூர் ராஜூ

கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-சென்னையில் பிரதமர் மோடி சில தினங்களுக்கு முன்பு தொடங்கி வைத்த புதிய திட்டங்கள் எல்லாம் அ.தி.மு.க. ஆட்சியில் தீட்டப்பட்ட திட்டங்கள் , அதனை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். அதற்கு பிரதமருக்கு நன்றி.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளில் அதிகம் குழப்பம் இருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளில் நிர்வாக சீர்கேடு ஏற்பட்டுள்ளது .அ.தி.மு.க. ஆட்சியில் கோவில்பட்டி 2-வது குடிநீர் திட்டம் நிறைவேற்றப் பட்ட போது ஒரு கோடியே […]

தூத்துக்குடி

உப்பள தொழிலாளி வெட்டிக்கொலை; பழிக்குப்பழி சம்பவமா?

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே தலைவன்வடலி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சண்முகராஜ் (வயது 45). உப்பள தொழிலாளி. இவருடைய மனைவி முத்து சந்தனம். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். நேற்று மாலையில் சண்முகராஜ் தனது வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக, மோட்டார் சைக்கிளில் ஆத்தூருக்கு புறப்பட்டு சென்றார்.தலைவன்வடலியை அடுத்த ஆரையூர் கல்வெட்டி பகுதியில் சென்றபோது, அங்கு அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 3 மர்மநபர்கள் திடீரென்று சண்முகராஜை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் […]

கோவில்பட்டி

கழுகுமலை கொடிமரத்து பேச்சியம்மன் கோவில் கொடை விழா; நாளை தொடங்குகிறது

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலுக்கு பாத்தியப்பட்ட கொடிமரத்து பேச்சியம்மன் மற்றும் அண்ணா கீழத் தெருவில் அமைந்துள்ள திரிபுரசுந்தரி அம்மன் கோவில் கொடை விழா நாளை(செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.கொடை விழாவை முன்னிட்டு நாளை காலை கொடியேற்றம் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து 3-ந்தேதி காலையில் காப்புக்கட்டுதல், 5-ந் தேதி அண்ணா கீழத் தெருவில் அமைந்துள்ள திரிபுரசுந்தரி அம்மன் கோவில் முன்பு விளக்கு பூஜை நடைபெறுகிறது.6-ந் தேதி மாலை 5 மணிக்கு அம்மன் ஊர் விளையாடல் அதனைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு […]

கோவில்பட்டி

பெட்டிக்கடையில் குட்கா, மதுபாட்டில்கள் பறிமுதல்; 3 பேர் கைது

கயத்தாறு பஜாரில் ராஜாபுதுக்குடியை சேர்ந்த ஒரு சிறுவன் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருளை பயன்படுத்துவதை ரோந்து சென்ற போலீசார் கண்டு பிடித்தனர். சிறுவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் குறிப்பிட்ட பெட்டிக்கடையில் புகையிலை பொருளை வாங்கியதாக தெரிவித்தான்.அந்த பெட்டிக்கடையில் போலீசார் சோதனை நடத்தினர். கடையில் சோதனை நடத்தியதில், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரசால் தடைசெய்யப்பட்ட 30 கிலோ குட்கா மற்றும் 58 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கடை ஊழியர்களான உச்சினிமாகாளி(வயது 37), மணிகண்டன்(30), சுடலைமணி( […]