• April 4, 2025

கோவில் உண்டியல் பணம் திருட்டு: கைதானவர் கோவில்பட்டி சிறையில் அடைப்பு

 கோவில் உண்டியல் பணம் திருட்டு: கைதானவர் கோவில்பட்டி சிறையில் அடைப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே மேல பாண்டியாபுரம் கிராமத்தில் உள்ள அரியநாச்சி அம்மன் கோவிலில் கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதி இரவு உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது. இதுகுறித்து மணியாச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், தூத்துக்குடி ராஜகோபால் நகரைச் சேர்ந்த சிங்கராஜ் மகன் அருணாசலம் (வயது 45) மற்றும் கோவில்பட்டி மந்தித்தோப்பை சேர்ந்த சேர்ந்த கனகராஜ் ஆகிய இருவரும் சேர்ந்து கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அருணாச்சலத்தை கைது செய்து கோவில்பட்டி ஜெயிலில் அடைத்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய கனகராஜ், மற்றொரு வழக்கு தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்டு பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *