மூக்கையா தேவர் 102 வது பிறந்த தினம்: இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு அலுவலகத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் பி. கே .மூக்கையா தேவர் 102 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிலக்கோட்டை பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் ராஜாராம் தலைமை தாங்கினார்/. இவ்விழாவில் மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் மாயாண்டி வரவேற்று பேசினார்.
விழாவில் வெளியேற்று வெளியேற்று எம்.பி.சி. பட்டியலில் இருந்து வெளியேற்று, வழங்கிடு வழங்கிடு டிஎன்டி ஒற்றைச் சாதிச் சான்று வழங்கிடு, அமைத்திடு அமைத்திடு டி என் டி தனி நல வாரியம் அமைத்திடு என கோஷங்கள் எழுப்பினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாநில கூட்டமைப்பு செயலாளர் முருகன், மாநில பொருளாளர் இளங்கோ, மாநில மகளிர் அணி செயலாளர் வசந்தி தெய்வேந்திரன், மாவட்ட நிர்வாகிகள் குமார், ராஜாராம், பாலசுப்பிரமணியன், ராஜாங்கம் மற்றும் கூட்டமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திண்டுக்கல் மாவட்ட திமுக மகளிர் அணி பொறுப்பாளரும், பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு மகளிர் அணி மாநில செயலாளர் வசந்தி தெய்வேந்திரன் கூறுகையில்.”சட்டசபை கூட்டத்தில் பி கே மூக்கையா தேவருக்கு உசிலம்பட்டியில் மணிமண்டபம் கட்டுவதற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.,இந்தியா முழுவதும் புலம்பெயர்ந்து உள்ள பிரமலைக்கள்ளர் இன மக்களுக்கு மத்திய மாநில அரசுகள் ஒரே டிஎன்டி சான்று வழங்க வேண்டும் என்று கோரிக்கையும் நிறைவேற்றி தந்தால் என்றென்றைக்கும் கடமைப்பட்டு இருப்போம்” என்றார்.
