• April 5, 2025

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி பெருந்திருவிழா நாளை கொடியேற்றம்; மக்களை மகிழ்விக்க ராட்டினங்கள் ரெடியாகிறது

 கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி பெருந்திருவிழா நாளை கொடியேற்றம்; மக்களை மகிழ்விக்க ராட்டினங்கள் ரெடியாகிறது

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோவிலில் பங்குனி பெருந்திருவிழா நாளை 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

கொடியேற்றத்தை தொடர்ந்து  தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், அம்பாள்-சுவாமி வீதிஉலா நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 13-ந்தேதி தேர் திருவிழா, 14-ந் தேதி தீர்த்தவாரி, 15-ந்தேதி தெப்ப திருவிழா நடைபெறுகிறது.

கோவில்பட்டி பங்குனி திருவிழா என்பது உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுப்புற கிராமங்களில் உள்ள மக்களுக்கும் விஷேசமானது. கோவில் திருவிழாவை காண கூட்டம் கூட்டமாக வருவார்கள். அவர்கள் மனம் குளிர கோவில் மைதானத்தில் மினி பொருட்காட்சி அமைந்து விடும்.

இதன் முத்தாய்ப்பாக பெரிய ராட்டினங்கள் அமைப்பது தான். நேற்று மாலை ராட்டினங்கள் வந்து சேர்ந்தன.  ராட்டினங்கள் பொருத்தும் பணிகள் இன்று தொடங்கி உள்ளன.

இந்த பணியில் ஈடுபட்டுள்ள கோவில்பட்டி அருகே குருவிகுளத்தை சேர்ந்த லெனின் தர்மராஜ் என்பவரை சந்தித்த போது அவர் கூறியதாவது:-

நான் 30 வருடமாக இந்த தொழிலில் இருக்கிறேன், தமிழ்நாடு, கேரளா மாநிலம் முழுவதும் கோவில் திருவிழாக்கள், அரசு பொருட்காட்சி நடக்கும் ஊர்களில் நாங்கள் ராட்டினங்களை நிறுவுவோம். தனியார் போருட்காட்சிக்கும் செல்வோம்.

ஜியாண்ட் வீல், கப் அண்ட் சாஸ்தர், பிரேக் டான்ஸ், கிராஸ் வில்   கொலம்பஸ் ராட்டினங்கள் ஆகியவற்றை இங்கு நிறுவி வருகிறோம். இதே போல் இன்னொரு செட் ராட்டினங்கள் இருக்கின்றன. அதை தென்காசி கோவில் கும்பாபிஷேகத்தை யொட்டி அங்கு அமைத்து உள்ளோம்.

ராட்டினங்கள் சவாரி செய்வதற்கு 100 ரூபாய் கட்டணம் வசூலிக்க இருக்கிறோம், கோவில் திருவிழா கொடியேற்றம் நாளை தொடங்குகிறது. ராட்டினங்கள் பொருத்தி சோதனை ஓட்டமாக ஓடசெய்து அதன்பிறகுதான் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவோம். அநேகமாக 7 -ந் தேதி முதல் ராட்டினங்கள், பொதுமக்கள்  உபயோகத்துக்கு கொண்டு வருவோம்.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கி விடுவதால் கோவில் விழா முடிந்தபிறகும் ராட்டினங்கள் பொதுமக்களை தொடர்ந்து மகிழ்விக்க இயக்குவோம். மே மாதம் 5 -ந்தேதி வரை கோவில்பட்டியில் முகாமிட்டு இருப்போம்.

இவ்வாறு லெனின் தங்கராஜ் கூறினார்.

கோவில் மைதானத்தில் ராட்டினங்கள் மட்டுமின்றி சிறுவர் சிறுமியர்களை கவரும் பல்வேறு விதமான விளையாட்டு சாமான்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற இருக்கின்றன.

அனைத்து தரப்பினரையும் கவரும் டெல்லி அப்பள கடைகள், பெண்களை மயக்கும் வளையல் மற்றும் மேக்கப் பொருட்கள் விற்பனை கடைகள், வித விதமான தின்பண்டங்கள், குளிர்பான கடைகள் உருவாக இருக்கின்றன,

தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுவார்கள் என்பதால் மாலை நேரத்தில் போலீசார் அதிக அளவில் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவார்கள். கூட்ட நெருக்கடியை பயன்படுத்தி ஜேப்படி செய்வது, பெண்களிடத்தில் வம்பு செய்வது போன்றவற்றில் ஈடுபடுவோரை கண்காணிக்க சாதாரண உடையில் போலீசார் ரோந்து சுற்றி வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *