தேசிய கேலோ இந்தியா ஆக்கி போட்டி; தமிழக பெண்கள் அணியில் கோவில்பட்டி வீராங்கனை அன்னபாக்கியம்

17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான தேசிய கேலோ இந்தியா ஆக்கி போட்டி. ஜூன் 4-ந் தேதி முதல் அரியானா மாநிலம் பஞ்ச குலா என்ற இடத்தில் நடைபெற உள்ளது.
இதில் தமிழ் நாடு அணியின் சார்பாக விளையாட தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த வீராங்கனை. அ. அன்னபாக்கியம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையொட்டி அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
