இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் எட்டயபுரம் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி முதன் முறையாக நீட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடைபெற்றது. கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 463 பேரும், எட்டயபுரம் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி மையத்தில் 348 பேரும் நீட் தேர்வு எழுதினரகள் .காலையிலிருந்து மாணவர்கள், பெற்றோர்கள் […]
நாடு முழுவதும் இன்று நடைபெற்ற நீட் தேர்வில் 22 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் 31 மாவட்டங்கள் நடந்த நீட் தேர்வில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். தூத்துக்குடி மாவட்டத்தில் 4 தேர்வு மையங்களில் இன்று நீட் தேர்வு நடைபெற்றது. தூத்துக்குடி வ.உ.சி. பொறியியல் கல்லூரியில் 480, தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 480, எட்டயபுரம் பாரதியாா் நூற்றாண்டு நினைவு மகளிா் பாலிடெக்னிக் கல்லூரியில் 360, கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் […]
சாதி வாரி கணக்கெடுப்பின்போது டி.என்.டி. மக்களுக்கு தனிப்பட்டியல் இடம்பெற வேண்டும்; மாநில செயற்குழு
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் சீர் மரபினர் பழங்குடிகள், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் நாடோடி பழங்குடியினர் தேசிய கூட்டு நடவடிக்கை இன குழுக்களின் தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அகில இந்திய டி.என்.டி அரசியல் முன்னணி கூட்டமைப்பு தலைவர் சுப்பாராவ் தலைமையில் நடைபெற்றது. கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் ராஜாராம்,மாநில துணைச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் மகளிர் அணி மாநில தலைவர் விண்ணரசி மல்லிகா வரவேற்று பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- […]
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோயம்புத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் 26 பொதுமக்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் வேதனை அளிக்கிறது. அதே நேரத்தில், முஸ்லிம் இளைஞர்கள் சிலர் துணிச்சலுடன் செயல்பட்டு, மீதமுள்ள மக்களைப் பாதுகாப்பாக மீட்டெடுத்த செய்தி மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது. இந்தச் செய்தி ஊடகங்களில் விரிவாக வெளியிடப்படவில்லை. மத்திய அமைச்சரவையில் உள்ள சிலர் போர் தொடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால், போர் என்பது எளிதான விஷயம் […]
நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள உலகம்மை உடனுறை பாபநாச சுவாமி கோவில் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் கடந்த 2005-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்கான யாகசாலை பூஜைகள் கடந்த 27-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். முன்னதாக அதிகாலை 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், 6-ம் […]
போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான வழிகாட்டுதல் கருத்தரங்கம்; தூத்துக்குடியில் நடந்தது
தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வில் வெற்றி பெற ஊக்கப்படுத்தும் விதமாக தூத்துக்குடி ஏ.வி.எம் கமலவேல் மஹாலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட்ஜான், சப் இன்ஸ்பெக்டர் தேர்விற்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் விடாமுயற்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் படித்து தேர்வில் வெற்றி பெறுமாறு வாழ்த்தி ஊக்கப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் சப் இன்ஸ்பெக்டர்கள் சிலர், தாங்கள் படித்து வெற்றி பெற்றது […]
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த சேர்வகாரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவர் திருப்பூர் பச்சாபாளையம் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி ஆனந்தி. இந்த தம்பதியின் மகள் தீக்ஷனா தாராபுரத்தில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நாகராஜ் தனது மனைவி மற்றும் மகளுடன் திருச்செந்தூர், திருநள்ளாறு உள்ளிட்ட ஆன்மிக தளங்களுக்கு சென்றுள்ளார். அவர்கள் மூவரும் இன்று அதிகாலை 3 மணியளவில் தாராபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்திறங்கியுள்ளனர். அங்கிருந்து நாகராஜ் […]
தே.மு.தி.க. இளைஞரணி செயலாளராக எழும்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. நல்லதம்பி இருந்து வந்தார். கடந்த மாதம் 30-ந் தேதி தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் நடைபெற்ற தே.மு.தி.க. தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், அவரிடம் இருந்து அந்தப் பதவி பறிக்கப்பட்டு, விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் வசம் ஒப்படைக்கப்பட்டது. அதற்கு பதிலாக நல்ல தம்பிக்கு கட்சியில் உயர்மட்டக்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதனால், அதிருப்தி அடைந்த நல்லதம்பி, கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு கடிதம் ஒன்று […]
சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் 6வது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு இன்று தொடங்கி 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாடு மதுரை ஆதீனத்தின் சார்பில் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக மதுரை ஆதீனத்தின் 293-வது பீடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞான சம்பந்ததேசிக பரமாச்சார்ய சுவாமிகள் மதுரையில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது கார் உளுந்தூர்பேட்டை அருகே வந்த போது மற்றொரு கார் மோதியது. இந்த விபத்தில் […]
தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மாரியப்பன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ரகசிய தகவலின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலரான எனது உத்தரவின் பேரில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதி-1-ன் உணவு பாதுகாப்பு அலுவலர் அச்சுதராம், தூத்துக்குடி மாநகராட்சி அண்ணாநகர் 12-வது தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டினை திடீர் ஆய்வு செய்தார். அப்போது அங்கு உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் மாடு வதைசெய்து, மாட்டிறைச்சி விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. […]