தூத்துக்குடி மாவட்டத்தில் 60 வயது சித்த மருத்துவர் உள்பட 1800 பேர் நீட் தேர்வு எழுதினர்

நாடு முழுவதும் இன்று நடைபெற்ற நீட் தேர்வில் 22 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் 31 மாவட்டங்கள் நடந்த நீட் தேர்வில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 4 தேர்வு மையங்களில் இன்று நீட் தேர்வு நடைபெற்றது. தூத்துக்குடி வ.உ.சி. பொறியியல் கல்லூரியில் 480, தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 480, எட்டயபுரம் பாரதியாா் நூற்றாண்டு நினைவு மகளிா் பாலிடெக்னிக் கல்லூரியில் 360, கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 480 பேர் என மொத்தம் 1,800 போ் நீட் தோ்வு எழுதினர்.பிற்பகல் 2 மணிமுதல் மாலை 5.20 மணி மணி வரை தேர்வு நடத்தது.

ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் பச்சைமால் 60 வயதில் தன்னம்பிக்கையுடன் தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்திற்கு தேர்வு எழுத வந்தார்.
மாணவ மாணவிகள் நீட் தேர்வு தோல்வியால் மனம் உடைய வேண்டாம், விபரீத முடிவு எடுக்கக் கூடாது காலம் இருக்கிறது. என்று தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.
மத்திய அரசு நீட் தேர்வு எழுத வயது வரைமுறை கொண்டுவர வேண்டும், தமிழக அரசு சிபிஎஸ்சி கல்விக்கு இணையாக பாடத்திட்டத்தினை தரம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.


