கோவில்பட்டியில் முதன் முறையாக நீட் தேர்வு மையம்; 463 பேர் பங்கேற்றனர்



இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் எட்டயபுரம் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி முதன் முறையாக நீட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடைபெற்றது.
கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 463 பேரும், எட்டயபுரம் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி மையத்தில் 348 பேரும் நீட் தேர்வு எழுதினரகள்
.காலையிலிருந்து மாணவர்கள், பெற்றோர்கள் தேர்வு மையங்களில் குவிந்தனர். கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள தேர்வு மையத்தில் அருகில் உள்ள நீதிமன்ற வளாகம், பிஎஸ்என்எல் அலுவலக வளாகம் , ஆங்காங்கே இருந்த மரத்தின் அடியில் மாணவர்களும் பெற்றோர்களும் கடும் வெயிலுக்கு இடையில் அமர்ந்து இருந்தனர்.
மதியம் 2 மணி முதல் 5. 20 மணி வரை தேர்வு என்பதால் மாணவர்கள் தாங்கள் கொண்டு வந்த உணவினை அங்கேயே அமர்ந்து சாப்பிட்டனர்.

பின்னர் பலத்த சோதனைக்கு பின்னர் மாணவர்கள் தேர்வு அறைக்கு சென்றனர்.தூத்துக்குடியை சேர்ந்த மாணவர் ரிஷிகிஷோர் என்பவர் ஒரிஜினல் ஆதார் அட்டை கொண்டு வரவில்லை என்பதால் மையத்திற்குள் அனுமதிக்கவில்லை. இதையடுத்து கோவில்பட்டி செய்தியாளர்கள் சிலர் உதவியுடன் இ சேவை மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு புதிதாக ஆதார் அடையாள அட்டைஇணையத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்டு பின்னர் அதை காண்பித்து தேர்வு மையத்திற்குள் சென்று தேர்வு எழுதினர்.


