• May 14, 2025

Month: May 2025

செய்திகள்

அத்துமீறும் பாகிஸ்தான்: இதுவரை அப்பாவி பொதுமக்கள் 13 பேர் பலி

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய படைகள் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்தன. இந்திய படைகளின் தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டிய கிராமங்களில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, அத்துமீறலில் ஈடுபட்டது. பூஞ்ச், பாரமுல்லா, ரஜவுரி, குப்வாரா உள்ளிட்ட மாவட்டங்களின் கிராமங்களை குறிவைத்து சிறு பீரங்கிகளால் தாக்குதல் நடத்தியது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் பதுங்கு குழிகளில் ஒளிந்து கொண்டனர். சிலர் பாதுகாப்பான இடங்களை […]

செய்திகள்

அமைச்சர்கள் ரகுபதி, துரைமுருகன் இலாகாக்கள் மாற்றம்

அமைச்சர்கள் ரகுபதி, துரைமுருகன் ஆகியோரின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது.*அமைச்சர் ரகுபதிக்கு கனிமவளத்துறை ஒதுக்கீடு .*அமைச்சர் ரகுபதியிடம் இருந்த சட்டத்துறை துறைமுருகனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. * அமைச்சர் துரைமுருகன், நீர்வளத்துறையுடன் சேர்த்து சட்டத்துறையையும் சேர்த்து கவனிப்பார்.

கோவில்பட்டி

நீராவி புதுப்பட்டியில்   முளைப்பாரி ஊர்வலம்           

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள நீராவி புதுப்பட்டியில் உள்ள  காளியம்மன், துர்க்கை அம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.  காளியம்மன் மற்றும் துர்க்கை அம்மனுக்கு அபிஷேக அலங்காரங்கள் உட்பட சிறப்பு பூஜைகள் நடந்தது,அதனைத் தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட பெண்கள் விரதம் இருந்து கும்மி பாடல்கள் பாடி முளைப்பாரி சுமந்து ஊர்வலமாக முக்கிய விதிகள் வழியாக சென்று அய்யனார் கோவில் குளத்தில் கரைத்தனர். இந்நிகழ்ச்சியில்  நிராவி புதுப்பட்டி கம்மவார் சங்க நிர்வாகிகள் பாலமுருகன்,பாலகிருஷ்ணன்,ராமமூர்த்தி,சுப்புராமன்,சங்கரசுப்பு,நடராஜன்,நவநீதன், […]

செய்திகள்

பிளஸ்-2 ரிசல்ட்: அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற 5 மாவட்டங்கள்

தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 தேர்வெழுதிய மொத்தப் பள்ளி மாணாக்கர்களின் எண்ணிக்கை : 7,92,494 மாணவியர்களின் எண்ணிக்கை : 4,19,316 மாணவர்களின் எண்ணிக்கை: 3,73,178 தேர்ச்சி பெற்றவர்கள் : 7,53,142 (95.03%) மாணவியர் 4,05,472 (96.70 %) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 3,47,670 (93.16 %) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட 3.54 % மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்விற்கு வருகைப்புரியாதவர்கள்: 10,049 கடந்த மார்ச்- 2024-ஆம் ஆண்டு பொதுத்தேர்வில், தேர்வெழுதிய மாணாக்கர்களின் எண்ணிக்கை 7,60,606. […]

செய்திகள்

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது

பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி தொடங்கி, 25-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வை பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்களும், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகளும், தனித்தேர்வர்களாக 18 ஆயிரத்து 344 பேரும், சிறைவாசிகள் 145 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதினார்கள். தேர்வு முடிந்த பிறகு விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கியது. அந்த பணிகளும் நிறைவு […]

தூத்துக்குடி

தூத்துக்குடி இயக்குநர் இயக்கிய “திரு” குறும்பட கலைஞர்களுக்கு ஆல்பர்ட் ஜான் பாராட்டு

கொல்கத்தாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 5ம் ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ்நாட்டில் தூத்துக்குடியை சேர்ந்த இயக்குநர் அருந்ததி அரசு என்பவரின் “திரு” என்ற குறும்படம் தமிழ் மொழியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது. இந்த குறும்படம் திருநங்கையர்களின் வாழ்வியல் பிரச்சினைகளையும், அடுத்த கட்ட நகர்வு குறித்தும் அழுத்தமாக பேசும் விதமாக எடுக்கப்பட்டிருந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறை சார்பாக உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்ட “திரு” என்கிற திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வு குறும்படத்தின் இயக்குநர் மற்றும் அனைத்து கலைஞர்களுக்கும் […]

செய்திகள்

சென்னையில் 2 இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை

நாடு முழுவதும் உள்துறை அமைச்சகம் சார்பில் 244 இடங்களில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை இன்று நடைபெற்றது..  இவற்றில் சென்னையில் உள்ள கல்பாக்கம், துறைமுகம் ஆகிய 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு இருந்தன. இந்தியாவில் கடைசியாக கடந்த 1971-ம் ஆண்டு போர்க்கால ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு 54 ஆண்டுகள் கழித்து மீண்டும் இன்று போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.. அதேபோல், இன்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை […]

கோவில்பட்டி

தமிழ்நாடு ஜூனியர் ஆண்கள் ஆக்கி அணி தேர்வு; கோவில்பட்டியில் 2 நாட்கள் நடக்கிறது

ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு தலைவர் சேகர் ஜே மனோகரன், பொதுச் செயலாளர் முனைவர் செந்தில் ராஜ்குமார் ஆகியோர் கூட்டாக சேர்ந்து  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கோவில்பட்டியில் கே ஆர் கல்வி நிறுவனம் சார்பாக 14வது ஆண்டு  லட்சுமி அம்மாள் நினைவு அகில இந்திய ஆக்கி போட்டி மே 23ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை கோவில்பட்டி  கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள செயற்கைப்புல் ஆக்கி மைதானத்தில் நடைபெறுகிறது இப்போட்டியில் தமிழக ஜூனியர் அணி […]

செய்திகள்

இந்தியா தாக்குதலை நிறுத்த முன்வந்தால் நாங்களும் தயார்; பாகிஸ்தான்  பாதுகாப்பு மந்திரி  

காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப்பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வந்தது. இன்று மாலை இந்தியா முழுவதும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் போர் ஒத்திகை நடத்தப்போவதாக இந்தியா அறிவித்திருந்தது. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியது. நள்ளிரவு 1.44 மணிக்கு பாகிஸ்தான் மீதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இந்தியா தாக்குதல் நடத்தி உள்ளது. மொத்தம் 9 […]

செய்திகள்

9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தியது எப்படி? பரபரப்பு வீடியோவை

காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான ‘தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்’ பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று அதிகாலை  அதிரடி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள […]