• May 14, 2025

பிளஸ்-2 ரிசல்ட்: அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற 5 மாவட்டங்கள்

 பிளஸ்-2 ரிசல்ட்: அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற 5 மாவட்டங்கள்

தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 தேர்வெழுதிய மொத்தப் பள்ளி மாணாக்கர்களின் எண்ணிக்கை : 7,92,494 மாணவியர்களின் எண்ணிக்கை : 4,19,316 மாணவர்களின் எண்ணிக்கை: 3,73,178

தேர்ச்சி பெற்றவர்கள் : 7,53,142 (95.03%)

மாணவியர் 4,05,472 (96.70 %) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 3,47,670 (93.16 %) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட 3.54 % மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்விற்கு வருகைப்புரியாதவர்கள்: 10,049

கடந்த மார்ச்- 2024-ஆம் ஆண்டு பொதுத்தேர்வில், தேர்வெழுதிய மாணாக்கர்களின் எண்ணிக்கை 7,60,606. தேர்ச்சி பெற்றோர் 7;19,196. தேர்ச்சி சதவிகிதம் 94.56 %

கடந்த மார்ச் 2024 பொதுத்தேர்வினை விட இவ்வாண்டு தேர்ச்சி 0.47% சதவிகிதம் கூடுதலாக உள்ளது.

மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை – 7,513.

100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை – 2,638.

100% தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 436.

பள்ளிகள் மேலாண்மை வாரியான தேர்ச்சி சதவிகிதம்

1. அரசுப் பள்ளிகள் 91.94 %

2. அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.71%

3. தனியார் சுயநிதிப் பள்ளிகள் 98.88%

பள்ளிகள் வகைப்பாடு வாரியான தேர்ச்சி சதவிகிதம்

4. இருபாலர் பள்ளிகள்-95.30 %

5. பெண்கள் பள்ளிகள்96.50 %

6. ஆண்கள் பள்ளிகள் 90.14%

பெண்கள் பள்ளிகள் ஆண்கள் பள்ளிகளை விட 6.36% சதவிகிதம்

கூடுதலாகவும், இருபாலர் பயிலும் பள்ளிகள் ஆண்கள் பள்ளிகளை விட 5.16% சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்

2

முக்கியப் பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களின் தேர்ச்சி சதவிகிதம்/ எண்ணிக்கை

1.தமிழ் 99.15% எண்ணிக்கை 135

2. இயற்பியல் 99.22 % எண்ணிக்கை 1,125

3.வேதியியல் 98.99 % எண்ணிக்கை 3,181

4. உயிரியல் 99.15% எண்ணிக்கை 827

5. கணிதம் 99.16 % எண்ணிக்கை 3,022

6.தாவரவியல் 99.35 % எண்ணிக்கை 269

7.விலங்கியல் 99.51% எண்ணிக்கை 36

8. கணினி அறிவியல் 99.73 % எண்ணிக்கை 9,536

9. வணிகவியல் 98.36 % எண்ணிக்கை 1,624

10கணக்குப்பதிவியல் 97.36 % எண்ணிக்கை 1,240

.11.பொருளியல் 98.17% எண்ணிக்கை 556

12.கணினிப்பயன்பாடுகள் 99.78 % எண்ணிக்கை 4,208

13 வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் 98.78 % எண்ணிக்கை 273

ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களின் எண்ணிக்கை- 26,887,

ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற அரசுப்பள்ளி மாணாக்கர்களின் எண்ணிக்கை- 2,853.

பாடப் பிரிவுகள் வாரியான தேர்ச்சி சதவிகிதம்

1. அறிவியல் பாடப் பிரிவுகள் 96.99 %

2. வணிகவியல் பாடப் பிரிவுகள் 92.68 %

3. கலைப் பிரிவுகள் 82.90 %

4. தொழிற்பாடப் பிரிவுகள் 84.22 %

அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்ற முதல் 5 மாவட்டங்கள்

1.அரியலூர் 98.82%

2. ஈரோடு 97.98 %

3. திருப்பூர் 97.53 %

4. கோயம்புத்தூர் 97.48 %

5.கன்னியாகுமரி 97.01%

அரசுப் பள்ளி மாணாக்கர்களில் அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்ற முதல் 5 மாவட்டங்கள்

1.அரியலூர் 98.32 %

2.ஈரோடு 96.88 %

3.திருப்பூர் 95.64 %

4.கன்னியாகுமரி 95.06 %

5.கடலூர்94.99 %

தேர்வெழுதிய மாற்றுத் திறனாளி மாணாக்கர்களின் எண்ணிக்கை 8,019.

தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 7,466(93.10%

தேர்வெழுதிய சிறைவாசிகளின் பெற்றோர் மொத்த எண்ணிக்கை 140 தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை130 (92.86%).

தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் எண்ணிக்கை 16,904.

தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 5,500 (32.54 %).

மேற்கண்ட தகவல்களை பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *