தமிழ்நாடு ஜூனியர் ஆண்கள் ஆக்கி அணி தேர்வு; கோவில்பட்டியில் 2 நாட்கள் நடக்கிறது

ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு தலைவர் சேகர் ஜே மனோகரன், பொதுச் செயலாளர் முனைவர் செந்தில் ராஜ்குமார் ஆகியோர் கூட்டாக சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கோவில்பட்டியில் கே ஆர் கல்வி நிறுவனம் சார்பாக 14வது ஆண்டு லட்சுமி அம்மாள் நினைவு அகில இந்திய ஆக்கி போட்டி மே 23ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள செயற்கைப்புல் ஆக்கி மைதானத்தில் நடைபெறுகிறது

இப்போட்டியில் தமிழக ஜூனியர் அணி கலந்து கொண்டு விளையாட உள்ளது தமிழக ஜூனியர் அணி தேர்வு கோவில்பட்டி எஸ் டி ஏ டி ஆக்கி மைதானத்தில் மே 10 மற்றும் 11ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது
தமிழகத்தில் சிறப்பாக விளையாடும் வீரர்களை தேர்வு செய்யும் விதமாக அனைவரையும் அழைக்கப்பட்டுள்ளது 1.1.2006 க்கு பின் பிறந்தவராக இருக்க வேண்டும். தேர்வில் கலந்து கொள்ளும் வீரர்கள் 10-ந் தேதி காலை 6 மணிக்கு மைதானத்துக்கு வரவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் முனைவர் குரு சித்திர சண்முக பாரதியை தொடர்பு கொள்ளவும் (தொலைபேசி எண் 9443190781).
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

