சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே உள்ள சுக்கனாம்பட்டியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி முத்துக்கருப்பி. இருவரும் கூலித் தொழிலாளர்கள். இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், தங்களது மகள்களின் காதணி விழாவுக்காக முத்துக்கருப்பி, சிறுக சிறுக பணம் சேர்த்து வந்தார். அந்த சேமிப்பை தகரத்திலான உண்டியலில் சேமித்து வைத்த அவர், வீட்டிலேயை குழிதோண்டி அந்த உண்டியலைப் புதைத்து பராமரித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு, அந்த சேமிப்புத் தொகை ரூ.1 லட்சத்தை எட்டியிருந்ததை […]
நடிகர் பெஞ்சமின் வெற்றி கொடிகட்டு, திருப்பாச்சி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். பேரரசு இயக்கத்தில் விஜய், திரிஷா நடிப்பில் வெளியான திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு நண்பராக நடிகர் பெஞ்சமின் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் பெஞ்சமின் இறந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது.இதனை மறுத்து நடிகர் பெஞ்சமின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீடியோவில் அவர் கூறி இருப்பதாவது:- சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி தவறுதலான செய்திகளைப் போட்டு இருக்கிறார்கள். என்னுடைய புகழை கலங்கப்படுத்துவதற்காக போட்டிருக்கிறார்கள். இது நான்காவது முறை. […]
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது. இதைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியது. அந்த வகையில் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மீது பாகிஸ்தான் நேற்று திடீர் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இதனால், இரு தரப்புக்கும் இடையே […]
கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் அருகே உள்ள சுபா நகர் மெயின் ரோட்டில் ஆஸ்கார் அறிவியல் மேலாண்மை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. முன்னோடி ஹோட்டல் மேலாண்மை திட்டத்தில் தொடங்கி, உயர்தர கல்வியை வழங்கும் பணியை மேற்கொண்டு வரும் இக்கல்வி நிறுவனத்தில் . தொழில் சார்ந்த படிப்புகள் ஏராளம் உள்ளன.இங்கு படித்து முடித்தவுடன் நிச்சய வேலை என்பதே இந்த கல்வி நிறுவனத்தின் தாரக மந்திரம். ஆஸ்கார் வழங்கும் படிப்புகள் விவரம் வருமாறு:- 1)கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேலாண்மை படிப்புகள் […]
ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்: தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல் மின் நிலையத்தில் 1000 மெகாவாட்
தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல் மின் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த ஊழியர்கள் என்.எல்.சி.யில் வழங்குவது போன்று ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 22 நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக என்.டி.பி.எல். அனல்மின் நிலையத்தில் 2 அலகுகள் மூலம் தலா 500 வீதம் உற்பத்தி செய்யப்படும் 1000 மெகாவாட் மின்சார உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக கடந்த 3-ந்தேதி முதல் யூனிட் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு 2-வது யூனிட்டும் […]
அமைச்சர் துரைமுருகனிடம் இருந்த கனிமவளத்துறை, அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இலாகா மாற்றம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர் துரைமுருகன் வகித்து வந்த கனிமவளத்துறை ரகுபதிக்கு மாற்றப்பட்டதற்கான காரணம் என்ன என்பது பற்றி கோட்டை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த படியாக, 2-வது இடத்தில் அமைச்சர் துரைமுருகன் இருந்து வருகிறார். தி.மு.க.வின் பொதுச் செயலாளராகவும், அவை முன்னவராகவும் இருந்து வருகிறார். தமிழகத்தில் கனிம வள கொள்ளை பிரச்சினை […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், பாஞ்சாலங்குறிச்சியில் 9.5.2025 மற்றும் 10.5.2025 தேதிகளில் நடைபெறவுள்ள வீரசக்கதேவி ஆலய திருவிழா அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் பொருட்டும், சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரித்திடவும், 8.5.2025 மாலை 6 மணி முதல் 11.5.2025 காலை 6 மணி வரை தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா – 2023 சட்டப்பிரிவு 163(1) -ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. […]
காஷ்மீரில் முக்கிய சுற்றுலா பகுதியான பஹல்காம் பகுதியில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இரு வாரம் அமைதியாக இருந்த இந்தியா இதற்கு தக்க பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 6-ந்தேதி நள்ளிரவில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த துல்லிய தாக்குதலில், 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகள் இலக்காக கொள்ளப்பட்டன. இதில், பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து நாடு முழுவதும் […]
ராஜஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் உச்சக்கட்ட பதற்றம்; சந்தேகப்படுபவர்கள் இருந்தால் கண்டதும் சுட
‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை வான்வழி தாக்குதலாக மத்திய அரசு நேற்று முன்தினம் தொடங்கியது. நள்ளிரவு 1 மணிக்குப்பின் இந்தியாவின் போர் விமானங்கள் பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும் அதிரடியாக நுழைந்து அங்குள்ள பயங்கரவாத கட்டமைப்புகளை ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்கி அழித்தன. பாகிஸ்தானில் 4 இடங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5 இடங்கள் என மொத்தம் 9 இடங்களில் பயங்கரவாதிகள் உள்ள அலுவலகங்கள், பயிற்சி […]
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், குலசேகரபுரம் கிராம ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் குப்பைகளை தரம் பிரித்து வழங்கிய வீடுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் வீடுகளில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தனித்தனியாக தரம் பிரித்து வழங்கிட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தினசரி தூய்மை காவலர்கள் வீடுகள் தோறும் சென்று குப்பைகளை பெற்று மக்கும் குப்பைகளை உரக்கிடங்கில் இட்டு உரமாக […]