கோவில்பட்டி அருகே குலசேகரபுரத்தில் குப்பைகளை தரம் பிரித்து வழங்கிய வீடுகளுக்கு பரிசு

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், குலசேகரபுரம் கிராம ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் குப்பைகளை தரம் பிரித்து வழங்கிய வீடுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் வீடுகளில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தனித்தனியாக தரம் பிரித்து வழங்கிட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தினசரி தூய்மை காவலர்கள் வீடுகள் தோறும் சென்று குப்பைகளை பெற்று மக்கும் குப்பைகளை உரக்கிடங்கில் இட்டு உரமாக மாற்றிடவும்,மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்திடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக பொதுமக்களிடம் குப்பைகளை தரம் பிரித்து பெறுவதற்கு விழிப்புணர்வு பயிற்சிகள் அளித்து பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் குலசேகரபுரம் ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சியில் குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் வீடுகளை குலுக்கல் முறையில் 3 வீடுகளை தேர்வு செய்து கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார் பரிசுகள் வழங்கினார்.
ஊராட்சி செயலர் சீனிவாசன்,சுகாதார உறுப்பினர்கள்,தூய்மை காவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

