தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிப்பு; குஜராத்தில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை
தமிழகத்தில் தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி முக்கிய தொழிலாகும். இந்த தொழிலில் சுமார் 60 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் உப்பு தமிழ்நாடு மட்டுமல்லாது, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது, பருவம் தவறிய மழை மற்றும், வானிலை மாற்றம் போன்றவற்றால் , ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் தொடங்க வேண்டிய உப்பு உற்பத்தி […]