கோவில்பட்டி நகர திமுக சார்பில் நீர், மோர் பந்தல்

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி நகர தி.மு.க சார்பில் நகர கழக அலுவலகம் முன்பு அமைந்துள்ள தமிழரசன் படிப்பகத்தில் கோடை வெயிலுக்கு நீர்,மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் திமுக நகர செயலாளர் கருணாநிதி நீர்,மோர் பந்தலை திறந்து வைத்து,பொதுமக்களுக்கு வழங்கினார்.
ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன்,மாவட்டத் துணைச் செயலாளர் ஏஞ்சலா,மாவட்ட பிரதிநிதி ரவீந்திரன்,நகர அவைத்தலைவர் முனியசாமி,நகர பொருளாளர் ராமமூர்த்தி,மாவட்ட அறங்காவலர் குழு இந்துமதி,நகர மகளிர் அணி சுதாகுமாரி,வழக்கறிஞர் ராமச்சந்திரன்,தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன்,அயலக அணி சுப்புராயன்,இளைஞர் அணி ஜமாலுதீன்,நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


