டி.என்.பி.எஸ்.சி, குரூப்-I பணிக்கான மண்டல அளவிலான மாதிரி தேர்வுகள்

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக குரூப்-I பணிக்கான மண்டல அளவிலான நேரடி மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளது.
5 வது மாதிரி தேர்வு 22.4.2025 ( செவ்வாய்க்கிழமை) காலை 10:30 மணி அளவில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெறும்.
டி.என்.பி.எஸ்.சி, குரூப்-I பணிக்கான மாதிரி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போட்டி தேர்வர்கள் மட்டும் இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்ளலாம். இந்த நேரடி மாதிரி தேர்வில் கலந்து கொள்ளும் போட்டித் தேர்வர்கள் கீழ்க்கண்ட Google படிவத்தை 21.4.2025 மாலை 4 மணிக்குள் பூர்த்தி செய்யவும்.
மேலும் தகவலுக்கு 0461-2003251 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


